O Panneerselvam and TTV Dinakaran may get 30-40 seats in the TVK Vijay alliance soon
30-40 சீட்ஸ் கன்பார்ம்.. விஜய் உடன் கூட்டணி உறுதியானது? தவெக உடன் கைகோர்க்கும் அந்த 2 கட்சிகள்! Chennai oi-Staff By Shyamsundar I Updated: Thursday, January 1, 2026, 8:34 [IST] Share This Article சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணியை அறிவிக்க 2 முக்கியமான கட்சிகள் முடிவு செய்துள்ளன என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு பின் இந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜயிடம் கூட்டணி தொடர்பாக டி.டி.வி. தினகரனின் அமமுகவும் ஓ. பன்னீர்செல்வமும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களுக்கும் – விஜய்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்றும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அரசியல் ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எத்தனை இடங்கள்?விஜய் இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 30-40 இடங்களை கொடுக்க முன் வந்துள்ளார். அதாவது அமமுகவிற்கும், ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடங்களை கொடுக்க முன் வந்துள்ளார். இதில்…
