Market update ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 2, 2026, 18:44 [IST] Share This Article ஒரே ஒரு தீக்குச்சி மொத்தக் காட்டையும் பொசுக்குவது போல, அரசாங்கத்தின் ஒரு வரி உயர்வு அறிவிப்பு எல்ஐசி-யின் பல்லாயிரம் கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி (ITC) நிறுவனம், அரசின் சிகரெட் வரி உயர்வால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதில் எல்ஐசி-யும் தப்பிக்கவில்லை. வெறும் 48 மணி நேரத்தில் ஐடிசி பங்கின் மதிப்பு 14% சரிந்து, சுமார் 72,000 கோடி சந்தை மதிப்பை காலி செய்துள்ளது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் எல்ஐசி (LIC) நிறுவனம் மட்டும் சுமார் 11,460 கோடி ரூபாய் இழப்பை…