2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை – Allmaa

ai42-1767063820

  செய்திகள்

2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை

News oi-Devika Manivannan By Published: Tuesday, December 30, 2025, 8:36 [IST] Share This Article

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பறித்த வண்ணம் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிலேயே பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிகம் பயன்படுத்த தொடங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது.

பல்வேறு நிறுவனங்களும் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தோடு தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலை விட்டு செல்லலாம் என வெளிப்படையாகவே அறிவித்தன. மனிதர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை சக ஊழியர்களாக கருதி வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு சூழல் தற்போது உண்டாகியிருக்கிறது.

2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை

இந்த சூழலில் GodFather of AI என அழைக்கப்படும் என அழைக்கப்படும் ஜெஃப்ராய் ஹிண்டன், முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2026 ஆம் ஆண்டில் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும் இதன் மூலம் இன்னும் நிறைய நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனக் கூறியிருக்கிறார்.

2025ஆம் ஆண்டு ஏஐ தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமான ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது என கூறியிருக்கிறார். 2026இல் ஏஐ அமைப்புகள் இன்னும் திறன் பெற்ற வகையாக மாறி இருக்கின்றன என்றும் எதிர்பார்ப்புகளை விட வேகமாக இந்த தொழில்நுட்பம் வளர்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

Also Readசிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?

ரீசனிங் மற்றும் டாஸ்க் கம்ப்ளீசன் ஆகியவற்றில் ஏஐ அதிக அளவில் மேம்பட்டு உள்ளது என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் ஏற்கனவே கால் சென்டர் வேலைகளில் இருந்து மனிதர்களை நீக்கிவிட்டது என குறிப்பிட்டு இருக்கும் அவர் மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலைகளை ஒரு மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பங்கள் முடிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மென்பொருள் பொறியாளர்கள் பல மாதங்கள் செய்யக் கூடியது வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் சில நாட்களிலேயே முடித்து விடுகிறது என கூறியுள்ளார். தொழில்புரட்சி வருகை தந்து மனிதர்களின் உடல் உழைப்புகளை குறைத்ததோ அதேபோல ஏஐ மனிதர்கள் மூளையை பயன்படுத்தி செய்யக்கூடிய வேலைகளை தற்போது குறைத்து வருகிறது என்றார்.

Recommended For Youவெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?வெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?

குறிப்பாக ஒயிட் காலர் வேலைகள் இன்னும் பறிபோகும் என கூறியுள்ளார். பல்வேறு நிபுணர்களும் நிறுவனங்கள் தீவிரமாக ஏஐ பயன்படுத்துவது மனித குலத்துக்கே பெரிய ஆபத்தாக மாறுகிறது என தொடர்ச்சியாக கூறியுள்ளனர். நிறுவனங்களின் ஏஐ மூலம் வேலையை முடித்து லாபத்தை அதிகரிக்கின்றன ஆனால் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர், இந்த போக்கு ஆபத்தானது என்கின்றனர்.

Share This Article English summary

AI Godfather Warns: 2026 Job Shock Looms with Mass Replacements

Geoffrey Hinton, the “Godfather of AI,” warns that rapid AI advancements could replace numerous jobs by 2026, starting from call centers and extending to complex software projects lasting months. Story first published: Tuesday, December 30, 2025, 8:36 [IST] Other articles published on Dec 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *