World உங்க உடம்புல இந்த நோய்கள் இருந்தா அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 8:30 [IST] Share This Article வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து தங்கி படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து கல்வி பயின்று வேலை வாய்ப்பு பெறுவதால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது என கருதுகிறது .அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கு விசா வேண்டிய விண்ணப்பம் செய்யக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் புதிய வழிமுறையை வெளியிட்டு இருக்கிறதாம்.அமெரிக்க தூதரகங்கள்…