செய்திகள் தமிழ்நாட்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கும் ரிலையன்ஸ்!! அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 13:24 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பெரிய அளவிலான நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. வாகன உற்பத்தி, வாகன உதிரி பாக உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்கள் , தோல் பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி என தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாடு அரசு மற்ற துறைகளிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை தொழில் மையமாகவும் உற்பத்தி மையமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகளின் பலனாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.மதுரையில் இன்று நடைபெற்ற TN Raising முதலீட்டாளர்கள் மாநாட்டில்…