செய்திகள் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 24, 2025, 11:19 [IST] Share This Article பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை…