ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! – Allmaa
செய்திகள் ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 9:12 [IST] Share This Article விமான சேவைகள் அதிகரித்து விட்டாலும், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் வந்துவிட்டாலும் இன்னமும் இலட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயில்களை தான் நாடுகிறார்கள்.இந்தியாவின் எந்த ஒரு பொது போக்குவரத்தையும் விட மக்கள் அதிகம் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து ரயில்கள் தான். குறிப்பாக பண்டிகை காலம் வந்து விட்டால் ரயில்களில் நிற்பதற்கு கூட இடமில்லை என கூறும் அளவிற்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் . ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது.ரயில் புறப்படும் 60 நாட்களுக்கு முன்னரே பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.…
