செய்திகள் முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 16, 2025, 15:07 [IST] Share This Article கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது பெங்களூர் நகரம் . இந்தியாவின் சிலிக்கான் வேலி , ஸ்டார்ட் அப் நகரம் என பல்வேறு பெயர் பெங்களூருக்கு உண்டு . உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களை பெங்களூருவில் அமைக்கின்றன.இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தாயகமாக பெங்களூரு தான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பெங்களூர் நகரம் தன்னை முதலீட்டுக்கான நகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது . ஆனால் அண்மைக்காலமாக பெங்களூரு நகருக்கு மாற்றாக சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்டவை மாறி வருகின்றன .குறிப்பாக ஆந்திர மாநில…