100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா?

andhraf-1766567020

  செய்திகள்

100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா?

News oi-Devika Manivannan By Published: Wednesday, December 24, 2025, 14:35 [IST] Share This Article

அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக்கூடிய ஒரு அதிரடியான திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் . ஆந்திர மாநிலத்தவர்களை அறிவியல் துறையில் தங்களுடைய ஆய்வுகளை தீவிர படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது முதலே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பது ,அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக உருவாக்குவது என்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் அமராவதி நகரத்தை குவாண்டம் தொழில்நுட்பதற்கான உலக மையமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா?

இதற்காக சந்திரபாபு நாயுடு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் இதன் படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த விஞ்ஞானிகள் குவாண்டம் அறிவியல் பிரிவில் ஆய்வு நடத்தி அதற்கு நோபல் பரிசு பெறுகிறார் எனும் பட்சத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் . குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி அமராவதியில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவை சேர்ந்த நபர்கள் குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார். அமராவதியில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம் அமைக்கப்படும் என்றும் இது உலக தரம் வாய்ந்த ஒரு ஆய்வு மையமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .

Also Readமனுசங்களுக்கு பதிலா AI-ஐ வேலைக்கு வச்சது பெரிய தப்பு!! புலம்பும் Salesforce நிறுவன அதிகாரிகள்!!மனுசங்களுக்கு பதிலா AI-ஐ வேலைக்கு வச்சது பெரிய தப்பு!! புலம்பும் Salesforce நிறுவன அதிகாரிகள்!!

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான ஒரு மாநிலமாக ஆந்திரா உருவாகும் என அவர் கூறும் அவர் குவாண்டம் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளிலும் இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கும் என கூறியுள்ள அவர் சுகாதாரத் துறையில் இது தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறும் என தெரிவித்துள்ளார்.

Recommended For Youபொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் முதல் மாநிலமாக ஆந்திரா விளங்கும் என தெரிவித்திருக்கிறார் .அடுத்த இரண்டு ஆண்டுகளில் குவாண்டம் கம்ப்யூட்டிங் கருவிகள் ஆந்திராவின் அமராவதிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்த அவர் குவாண்டம் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் அரசு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .இந்த நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி , ஐஐடி திருப்பதி இயக்குனர் சத்யநாராயணா மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான செயலாளர் அபய் கரண்டிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article English summary

“₹100 Crore Nobel Prize Incentive for Andhra’s Quantum Scientists: CM Naidu”

Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu announced a ₹100 crore prize for state scientists winning a Nobel in quantum science, aiming to position Amaravati as a global quantum hub Story first published: Wednesday, December 24, 2025, 14:35 [IST] Other articles published on Dec 24, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *