10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 22:05 [IST] Share This Article
உங்க வீட்டு அலமாரியில் அல்லது பர்ஸில் இருக்கும் சாதாரணமான பழைய 10 ரூபாய் நோட்டு கூட, ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? இன்றைய ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு லட்சக் கணக்கில் விலை பேசப்படுகிறது. ஆக உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்களை அலட்சியமாக வைத்திருக்காதீர்கள். அது உங்கள் கஜானாவிற்குள் இருக்கும் பொக்கிஷனங்கள் போன்றது.
சாதாரண 10 ரூபாய் நோட்டுகள் கூட, லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சீக்ரெட் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்கள் குறிப்பிட்ட அந்த குறியீடுகள் இருக்கும் தாள்களாக என்று பார்ப்பது தான். ஒரு வேளை உங்களிடம் இருக்கும் அந்த அரிய நோட்டுகள் இருந்தால், அதை அதிக விலைக்கு விற்பதற்கான வழியையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படி கூட பணக்காரர் ஆகலாம்?
ஒருவர் பணக்காரர் ஆக அரசு வேலையில் தான் இருக்க வேண்டும். லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் தனியார் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தொழில் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்கள் வசம் குறிப்பிட்ட பழைய ரூபாய் தாள்கள் மற்றும் காயின்கள் இருந்தாலும் பணக்காரர் ஆகலாம். அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். உங்கள் வீட்டில் இருக்கும் உண்டியலில் இருக்கும் 10 ரூபாய் நோட்டு இருந்தால், அதை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். இந்த நோட்டை விற்பனை செய்யும் முறையும் மிக எளிதானது.
ஏற்கனவே பலரும் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் மற்றும் நாணயங்களை மாற்றுவதன் மூலம், லட்சங்களில் வருமானம் பார்த்துள்ளனர். ஆக அப்படியான பொக்கிஷம் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதன் பிறகு அதை எப்படி விற்பனை செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அது என்ன ரூ.10 நோட்டு?
லட்சக்கணக்கில் விலை போகும் 10 ரூபாய் நோட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன:
· முதாலாவதாக அந்த 10 ரூபாய் நோட்டில் 786 என்ற வரிசை எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
· அந்த ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
· அந்த நோட்டில் அசோக சக்கரம் மற்றும் ஸ்வச் பாரத் லோகோ இருக்க வேண்டும். அதோடு 10 என்ற எண், ஏறு வரிசை எண் பேனல் மற்றும் பல மொழிகளிலும் அடங்கி இருக்கும்.
· நோட்டின் பின்புறத்தில் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கும் கொனார்க் சூரிய கோயில் படம் இருக்க வேண்டும்.
· இந்த 10 ரூபாய் நோட்டின் நிறம் சாக்லேட் பிரவுன் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் உள்ள மற்ற வடிவமைப்புகளில் மற்றும் ஜியோமெட்ரிக் பேட்டர்ன்கள் இருக்க வேண்டும். இந்த நோட்டு ஒன்று 4 லட்சம் ரூபாய்க்கும், 3 நோட்டுகள் 15 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
எங்கே எப்படி விற்பனை செய்வது?
குறிப்பிட்ட அந்த பொக்கிஷ ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்ய நீங்கள் Quikr இணையதளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு நோட்டின் போட்டோவை தெளிவாக எடுத்து அந்த தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதை பார்த்த வாடிக்கையாளர்கள் தேவை எனில், உங்களை தொடர்பு கொள்வார்கள். அதன் பிறகு நீங்கள் வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசி விற்பனை செய்து கொள்ளலாம்.
இருப்பினும் இதுபோன்ற நோட்டுகளை விற்பனை செய்யும் முன்பு, அதற்கான சரியான வழிகாட்டுதல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் பேராசை காரணமாக உங்கள் பணத்தை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது, இன்றைய ஆன்லைன் உலகில் மோசடியான வழக்குகள் ஏராளம் உண்டு. ஆக ரூபாய் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ எந்த நிறுவனத்திற்கும் ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்குவதில்லை. நீங்கள் மோசடிக்கு பலியாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக யாரும் உங்களிடம் முன்பணம் செலுத்த கோரினால் ஒரு போதும் செலுத்தி பணத்தை இழந்து விடாதீர்கள்.
Share This Article English summary
Do you want to know about old notes or coins that are trending in the market?
If you want to sell a 10 rupee note for lakhs, it must possess specific identifying features. Income can only be generated if these conditions are met Story first published: Monday, December 15, 2025, 22:05 [IST] Other articles published on Dec 15, 2025
