10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 14:41 [IST] Share This Article
பணம் சேமிப்பதிலும், அதனை தங்கத்தில் முதலீடு செய்வதிலும் இந்திய குடும்ப தலைவிகளை அடித்து கொள்ள முடியாது. நகை சீட்டு போட்டுவதில் தொடங்கி ஒரு போனஸ் தொகை வந்துவிட்டால் கூட அந்த பணத்திற்கு தங்கம் வாங்குவது என பெண்கள் பல ஆண்டுகளாக தங்கத்தை தான் நம்புகிறார்கள்.
இந்திய பெண்களுக்கும் தங்கத்துக்கும் இடையிலான பிணைப்பு மிக வலுவானது. அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மனைவி தங்கத்தில் செய்த முதலீடும் அதே தொகையில் தான் வாங்கிய காரின் மதிப்பும் தற்போது என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்து பிரபல நிதி ஆலோசகரான ஏ கே மந்தன் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் பெரிய வளர்ச்சியை பெற்றது. வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் தங்கம் விலை தொட்டது . தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு ஆண்டாக 2025 அமைந்தது . தங்கத்தில் செய்யப்படும் முதலீடு எப்போதுமே நம்மை மோசம் போக செய்யாது என்பதற்கு உதாரணமாக ஏ கே மந்தனின் பதிவு அமைந்திருக்கிறது.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கும் அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் 8 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கினேன், என்னுடைய மனைவி அதே 8 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினார். இன்று அந்த காரின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய் , ஆனால் அவர் வாங்கிய தங்கத்தின் மதிப்பு 32 லட்சம் என கூறி இருக்கிறார்.
Also Read
ஓவர்நைட்டில் மாறிய தொழிலாளர் சட்டங்கள்!! நிறுவனங்கள் இனி ஊழியர்களுக்கு இதையெல்லாம் செஞ்சே ஆகனும்!!
மேலும் தங்கத்தை வாங்க வேண்டாம் அந்த பணத்தில் நாம் எங்கேயாவது சுற்றுலா சென்று வரலாம் என நான் கூறினேன், அதற்கு என்னுடைய மனைவி சுற்றுலா 5 நாட்களுக்கு தான் நீடிக்கும் ஆனால் தங்கம் ஐந்து தலைமுறைகளுக்கு நீடிக்கும் எனக் கூறினார் . நான் ஒரு லட்சம் ரூபாய்க்கு போன் வாங்கினேன் அவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினார் தற்போது அந்த போனின் மதிப்பு 8,000 ரூபாய் தான் அவர் வாங்கிய தங்கத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறி இருக்கிறார். மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள் என பதிவு செய்திருக்கிறார்.
Recommended For You
தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?
எக்ஸ் பக்கத்தில் இவருடைய பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைகளையும் நூற்றுக்கணக்கானவர்களின் கமெண்டுகளையும் பெற்றிருக்கிறது . பலரும் இந்திய பெண்களின் முதலீட்டு முடிவுகளை பாராட்டியுள்ளனர். சிலர் வாழ்க்கை சில விஷயங்கள் அனுபவிக்கவும் வேண்டும் எப்போதுமே சேமிப்பு சேமிப்பு என ஓடி கொண்டிருக்க கூடாது என கூறியுள்ளனர். ஒரு பயனர் தங்கத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உண்மைதான் ஆனால் அந்த ஐந்து நாட்கள் சுற்றுலாவும் உங்களுடைய காரும் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளையும் அனுபவங்களையும் தந்திருக்கும் என கூறியுள்ளார்.
Share This Article English summary
Why Gold is always the best investment? – AK Mandhans post reveals the truth
Financial investor AK Mandhan’s post about gold investment his wife made 10 years ago has gone viral on the internet. Story first published: Saturday, November 22, 2025, 14:41 [IST] Other articles published on Nov 22, 2025