வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா? – Allmaa

befunky-collage-2026-01-20t101852-874-1768884542

  செய்திகள்

வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா?

News oi-Pugazharasi S By Published: Tuesday, January 20, 2026, 10:19 [IST] Share This Article

வெள்ளி இனி வெறும் ஆபரணம் மட்டுமல்ல, முதலீட்டிற்கும் ஒரு ஜாக்பாட் என்பதை நிரூபித்துள்ளது. 2026-ன் தொடக்கத்திலேயே மளமளவென உயர்ந்த வெள்ளி விலை, கடந்த வர்த்தக தினத்தில் ஒரு கிலோ 3,00,000 ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லை தொட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 30% லாபத்தை வாரி வழங்கியுள்ள வெள்ளியின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய வர்த்தக வரிகள் குறித்த மிரட்டல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நீங்கள் ஏற்கனவே வெள்ளி வைத்திருந்தால் இப்போதே விற்க வேண்டுமா, விலை இன்னும் உயரும் என்று காத்திருக்க வேண்டுமா அல்லது புதிய முதலீட்டைத் தொடங்கலாமா என்பது குறித்த முழுமையான அலசலை இங்கே காணலாம்.

முக்கிய மைல்கல்!

வெள்ளி விலையானது கடந்த வர்த்தக தினத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் கிலோவுக்கு 3 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்கள், தொழில்துறை தேவை மற்றும் வரி விதிப்பு பதற்றங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில் இதுவும் பாதுகாப்பு புகலிடம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. ஒரே வர்த்தக நாளில் 5.67% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ள இந்த விலையுயர்ந்த உலோகம், கிலோவுக்கு 4,04,087 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தையும் எட்டியது. இது கடந்த ஒரு வருடத்தில் 206% மேலாக ஏற்றத்தில் காணப்படுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 15, 2026 அன்று 2,92,960 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரை கூடுதல் வரி விதிக்கப் போவதாக விடுத்த எச்சரிக்கை, உலகச் சந்தையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் திடீர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் வெள்ளியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சர்வதேசச் சந்தையில் (COMEX) ஒரு அவுன்ஸ் வெள்ளி $94-ஐத் தாண்டியுள்ள நிலையில், இந்திய சந்தையிலும் இதன் அதிரடி ஏற்றம் தொடர்ந்து கொண்டுள்ளது.

விலை இனி என்னவாகும்?

தொடர்ந்து தொழில் துறையில் காணப்படும் தேவை, அதேசமயம் சப்ளையில் நிலவி வரும் பற்றாக்குறை, சீனாவின் புதிய லைசென்ஸ் கட்டுப்பாடுகள், ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மத்தியில், தற்போது அமெரிக்கா – கிரீன்லாந்து பிரச்சனையானது ஆரம்பித்துள்ளது. இது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையாக மட்டும் இல்லாமல், ஐரோப்பிய நாடுகளிடையேயும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆக இந்த ஏற்றமானது திடீர் ஏற்றமாக இருந்தாலும், நிச்சயம் நீண்ட கால அடிப்படையில் எட்டக் கூடிய ஒன்று தான். தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் மெதுவாக ஏற்றம் காணவே வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கலாம். இது வெள்ளி விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இருப்பினும் விலை உச்சத்தில் இருப்பதால் புதிதாக வாங்க நினைப்பவர்கள் மொத்தமாக வாங்காமல், விலை குறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம். அதோடு ஏற்கனவே குறைந்த விலையில் வாங்கியவர்கள், உச்சத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்து லாபத்தை பதிவு செய்யலாம். மீதமுள்ளவற்றை அப்படியே தொடரலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Is it the right time to invest in silver after it breached the ₹3 lakh milestone?

Silver hitting Rs 3 lakh is driven by geopolitical tensions and supply deficits. Experts suggest long-term investors hold, while short-term traders should book partial profits on dips. Story first published: Tuesday, January 20, 2026, 10:19 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *