வெள்ளி விலை: 2025இல் நடந்தது ஒரு டிரெய்லர் தான்!! 2026இல் தான் சம்பவமே இருக்கு – ராபர்ட் கியோசாகி!!
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 8:26 [IST] Share This Article
2025 ஆம் ஆண்டில் யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தையும் மிஞ்சி வெள்ளி விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வெள்ளியின் விலை உலக சந்தையிலும் சரி இந்தியாவிலும் சரி 140 சதவீதம் உயர்ந்திருக்கிறது . அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளியில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருந்திருக்கும் .அந்த அளவிற்கு வெள்ளி இந்த ஆண்டு மிக வேகமாக உயர்வு தந்திருக்கிறது .
நாள்தோறும் தங்கம் விலை ஏறுகிறதோ இல்லையோ வெள்ளியின் விலை நிச்சயமாக ஏறி விடுகிறது. ஏழைகளின் தங்கம் என அழைக்கப்பட்ட வெள்ளி தற்போது தங்கத்தை போலவே ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72 டாலர்கள் என்ற மைல் கல்லை கடந்துவிட்டது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தின் ஒரு கிராம் வெள்ளி விலை 244 ரூபாய் என்று அளவை தொட்டுவிட்டது . எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலோ ஒரு கிலோ வெள்ளியின் விலை 2, 30,000 ரூபாய் கடந்து வர்த்தகமாகிறது .

இந்த ஆண்டில் பல்வேறு பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்ட அனைத்தையும் பின்னுக்கு தள்ளி வெள்ளி மிகச் சிறந்த முதலீடாக வளர்ந்து நிற்கிறது. வெள்ளி விலை உயரும் என முன்கூட்டியே சரியாக கணித்தவர்கள் அதில் முதலீடு செய்து லாபம் பார்த்திருக்கிறார்கள் . அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வெள்ளி தான் பெரிய அளவில் வளரப்போகிறது வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக கூறி வந்தவர் தான் ராபர்ட் கியோசாகி.
Also Read
நடப்பாண்டில் 100% லாபம் தந்த Silver ETF: எப்படி முதலீடு செய்வது? விரிவான வழிகாட்டி
ரிச் டேட் புவர் டேட் புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி மக்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவுரை வழங்கிய வண்ணம் இருக்கிறார். அவர் நீண்ட காலமாகவே பொதுமக்கள் பங்குச் சந்தைகளை எல்லாம் விட்டு வெளியே வாருங்கள் பணத்தை அப்படியே வங்கியில் சேமிப்பு கணக்கில் வைக்காதீர்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள் வெள்ளியை வாங்குங்கள் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். அவர் கூறியது இந்த ஆண்டு நடந்து விட்டது .
2026 ஆம் ஆண்டில் வெள்ளி விலை என்ன ஆகும் என்பது குறித்த அவர் பரபரப்பான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் தற்போது வெள்ளி 70 டாலர்களை கடந்து விட்டது வெள்ளியை வாங்கியவர்களுக்கு இது நற்செய்தி ஆனால் மற்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு இது கெட்ட செய்தி என குறிப்பிட்டிருக்கிறார் .
Recommended For You
ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.89,000 வட்டி!! போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும் டக்கரான முதலீட்டு திட்டம்!!
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றால் டாலராக பணத்தை வைக்காதீர்கள். 2026 ஆம் ஆண்டில் வெள்ளியின் விலை 200 டாலர்களை எட்டும் என அவர் தெரிவித்திருக்கிறார் . தற்போது 70 டாலரில் இருந்து 200 டாலர்களாகும் என்றால் 2026 ஆம் ஆண்டிலும் வெள்ளியின் விலை 150 சதவீதத்துக்கு மேல் உயரும் என்பது இவருடைய கணிப்பாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Silver price will touch $200 in 2026 says Rich Dad Poor Dad author Robert Kiyosaki
The author of the book Rich Dad Poor Dad, Robert Kiyosaki, known for his commentary on fiat currency and hard assets, says that Silver will touch $200 in 2026. Story first published: Thursday, December 25, 2025, 8:26 [IST] Other articles published on Dec 25, 2025
