வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…!
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, January 9, 2026, 0:11 [IST] Share This Article
இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கர் அல்லாத நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் டிரம்ப் அரசு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க அனுமதி அளித்தால் வாங்குவதை பரிசீலிப்பதாக வியாழக்கிழமை அறிவித்ததுள்ளது. ராய்ட்டர்ஸ்-க்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கொடுத்த பதிலில், “வெனிசுலா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து தெளிவு கிடைத்தால் விதிகளை பின்பற்றி கச்சா எண்ணெய் கட்டாயம் வாங்குவோம்” என தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 3 அன்று அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின், வெனிசுலா- அமெரிக்கா இடையே இந்த வாரம் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றப்பட்டு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி, 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சுமார் 30-50 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை வெனிசுலா-வில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும்.

அமெரிக்கா வெனிசுலா கச்சா எண்ணெய் மீது 25% வரி விதித்ததால், ரிலையன்ஸ் மார்ச் 2025 முதல் வெனிசுலா-வில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. கடைசி வெனிசுலா ஷிப்மென்ட் 2025ஆம் ஆண்டு மே மாதம் கிடைத்தது.
குஜராத்தில் உள்ள ரிலையன்ஸின் இரு சுத்திகரிப்பு ஆலைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டு உள்ளது. ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலையில் வெனிசுலாவின் கனமான கச்சா எண்ணெய்களை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இது பெரும்பாலான சுத்திகரிப்பு ஆலையில் இருக்காது. வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் பெரும்பாலும் கனமான மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட வகையைச் சேர்ந்தது.
இத்தகைய எண்ணெயை சுத்திகரிப்பு செய்வதற்கு சிறப்பு வசதிகள் தேவைப்படுகின்றன, ஏனெனில் இது வழக்கமான லைட் கச்சா எண்ணெயை விட அதிக செலவு மற்றும் தொழில்நுட்பம் தேவை. இத்தகைய கச்சா எண்ணெய் டீசல், ஜெட் எரிபொருள், ஆஸ்பால்ட் போன்ற பொருள்களை அதிக அளவில் தருகிறது, ஆனால் பெட்ரோல் உற்பத்திக்கு குறைவானது.
உலக சந்தையில் ஹெவி க்ரூட் ஆயில் வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு, ஏனெனில் இதை சுத்திகரிப்பு செய்ய சிக்கலான சுத்திகரிப்பு ஆலைகள் தேவை. தற்போது சீனா வெனிசுலா எண்ணெயின் மிகப்பெரிய Buyer ஆக இருந்து வருகிறது, பெரும்பாலும் தள்ளுபடி விலையில் வாங்கி பயன்பெற்று வருகிறது. அமெரிக்காவின் கல்ஃப் கோஸ்ட் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் இத்தகைய கனமான எண்ணெயை பதப்படுத்துவதற்கு ஏற்றவாறு கட்டமைக்கப்பட்டுள்ளன, எனவே அமெரிக்கா இயற்கையாகவே வெனிசுலா எண்ணெய்க்கு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான சுத்திகரிப்பு ஆலைகள், குறிப்பாக கல்ஃப் கோஸ்ட் பகுதியில், ஹெவி மற்றும் சவுர் க்ரூட் எண்ணெயை சுத்திகரிப்பு திறன் கொண்டவை. இவை பல தசாப்தங்களுக்கு முன்பு வெனிசுலா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் இருந்து வரும் கனமான எண்ணெயை கருத்தில் கொண்டு கட்டப்பட்டவை. அமெரிக்காவின் சொந்த உற்பத்தி பெரும்பாலும் லைட் எண்ணெய் என்பதால், இந்த ஆலைகள் இறக்குமதி செய்யப்படும் ஹெவி எண்ணெயை நம்பியுள்ளன. இதனால் வெனிசுலா எண்ணெய் அமெரிக்க சுத்திகரிப்பாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
2012இல் ரிலையன்ஸ், வெனிசுலாவின் PDVSA நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தனது தினசரி தேவையின் சுமார் 20 சதவீதத்தை அங்கிருந்து பெற்றது. ஆனால் 2019இல் அமெரிக்க தடைகள் காரணமாக அது நிறுத்தப்பட்டது. தற்போது அமெரிக்கா தடைகளை தளர்த்தினால் அல்லது வெனிசுலா எண்ணெயை உலக சந்தைக்கு விடுவித்தால், இந்தியாவில் முதலில் வாங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் அதன் ஆலைகள் இதற்கு ஏற்றவை.
Share This Article English summary
Reliance Industries ready to buy Venezuelan oil if Trump govt gives clarity
Reliance Industries ready to buy Venezuelan oil if Trump govt gives clarity Story first published: Friday, January 9, 2026, 0:11 [IST] Other articles published on Jan 9, 2026
