வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!!
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 12:36 [IST] Share This Article
தற்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு வீட்டுக் கடன்கள் தான் அதற்கான நிதி ஆதாரமாக இருக்கின்றன. இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி தான் சொந்த வீடு கனவையே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
வீட்டுக்கடன் வாங்கும் நபர் 20 முதல் 25 ஆண்டு காலத்திற்கு அந்த வீட்டு கடனுக்கான இஎம்ஐ தொகையை மாதம் தோறும் செலுத்தியாக வேண்டும் . பெரும்பாலான நபர்கள் கையில் கணிசமான ஒரு பணம் வந்து விட்டாலே அந்த பணத்தை ப்ரீ பேமெண்ட் செய்துவிடலாம் என்று தான் எண்ணுவார்கள். இதனால் வட்டியில் பெருமளவு குறையும், சீக்கிரமாக கடனை அடைத்து நிம்மதி அடைந்துவிடலாம் என்பதுதான் நம்முடைய நம்பிக்கை .

ஆனால் இந்த ப்ரீ பேமெண்ட் செய்வதற்கே சில வழிமுறைகள் இருக்கின்றன .அவற்றை பின்பற்றினால் மேலும் பல லட்சங்களை மிச்சப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இப்போது மாதம் 30000 ரூபாய் ஈஎம்ஐ என்பது நமக்கு பெரிய தொகையாக தோன்றலாம், ஆனால் பணவீக்கம் அடிப்படையில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் இதன் மதிப்பே குறைவு தான் என கூறுகின்றனர். வீட்டு கடன் ப்ரீ பேமெண்ட் செய்வதற்கு சில வழிகளையும் கூறுகின்றனர்.
உதாரணமாக 40 லட்சம் ரூபாய்க்கு ஒரு நபர் வங்கியில் வீட்டு கடன் வாங்குகிறார் 10 சதவீத வட்டி, 25 ஆண்டுகளுக்கு கடன் செலுத்தும் காலம் என வைத்து கொள்வோம். இந்த 40 லட்சம் ரூபாய் கடனுக்கு 25 ஆண்டுகளில் அவர் வட்டியாக மட்டுமே 70 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டி இருக்கும். மாதம் தோறும் இவர் 37,000 ரூபாய் வீதம் இஎம்ஐ செலுத்த வேண்டிய இருக்கும்.

வீட்டு கடனில் தொடக்கத்தில் வரும் சில ஆண்டுகளில் அசல் தொகை கம்மியாக தான் கழிக்கப்படும் வட்டி தொகை தான் பெரும்பாலும் கழிக்கப்படும். உதாரணமாக உங்களுடைய முதல் மாத இஎம்ஐ தொகையில் 37 ,000 ரூபாயில் 34,000 ரூபாய் வட்டிக்கும் 3,000 ரூபாய் அசலுக்கும் செல்லும். அப்படி பார்க்கும்போது ஓராண்டு முடியும்போது வீட்டு கடனில் நீங்கள் 48 ஆயிரம் ரூபாய் தான் வட்டியாக செலுத்தி இருப்பீர்கள் கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் வட்டிக்காகவே சென்றிருக்கும்.
Also Read
வீட்டு கடன் வட்டியில் பல லட்சங்களை சேமிப்பது எப்படி? – ஒரு சின்ன மாற்றம் செஞ்சா போதும்!!
எனவே உங்களுக்கு ப்ரீ பேமென்ட் செய்யக்கூடிய எண்ணம் இருக்கிறது எனும் போது ஓராண்டுக்கு நீங்கள் இஎம்ஐ செலுத்தி முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாயை ப்ரீ பேமெண்டாக செய்ய வேண்டும் . அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு 27 இஎம்ஐகள் குறையும் , வட்டியில் ஏறக்குறைய 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
முதல் ஆண்டு முடிந்த உடனே எப்படி 1 லட்சம் ரூபாயை ப்ரீ பேமெண்ட் செய்தீர்களோ அடுத்த இரண்டாவது ஆண்டு முடிந்த பிறகும் இதே போல 1 லட்சம் ரூபாயை ப்ரீ பேமெண்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு 23 இஎம்ஐ குறையும் வட்டியும் கிட்டதட்ட 8 லட்சம் ரூபாய் வரை குறையும். இப்படி உங்களுடைய பிரின்ஸ்பல் அமௌண்ட் எனப்படும் அசல் தொகை அதாவது 40 லட்சம் ரூபாயில் 25 லட்சம் ரூபாயை கட்டி முடிக்கும் வரை ப்ரீ பேமெண்ட் செய்யலாம். அதன்பிறகு ப்ரீ பேமெண்ட் செய்யக்கூடாது.
Recommended For You
சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!
ஏனெனில் மீதம் இருப்பது 15 லட்சம் தான், அதுவும் அந்த சமயத்தில் உங்களுடைய இஎம்ஐ தொகையில் அசல் அதிகமாகவும் ,வட்டி குறைவாகவும் செலுத்த தொடங்கி இருப்பீர்கள் . எனவே பிரீ பேமெண்ட் செய்வதை விட்டுவிட்டு அந்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே 65 சதவீத பிரின்ஸ்பல் அமௌன்ட் அதாவது அசல் தொகை வரும் வரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் ப்ரீ பேமெண்ட் செய்ய வேண்டும் . அதன் பிறகு மீதியுள்ள 35 சதவீத தொகையை இஎம்ஐ-ஆக செலுத்துவது தான் புத்திசாலி தனம் என்கின்றனர்.
இந்த நடைமுறையை பின்பற்றினால் உங்களுடைய கடனை 10 ஆண்டுகளில் முடிக்கலாம் 40 லட்சம் ரூபாய் வரை வட்டியை குறைக்கலாம் என தெரிவிக்கின்றனர் . நீங்கள் வீட்டு கடன் வாங்குகிறீர்கள் அதனை முதல் 5 ஆண்டுகளிலேயே மொத்தமாக ப்ரீபேமெண்ட் செய்யுங்கள் இல்லை என்றால் மேலே கூறிய வழிமுறையை பின்பற்றுங்கள் என கூறுகின்றனர்.
Share This Article English summary
How to save huge interest amount while prepaying the home loan?
Home loan emi calculation and prepayments are quite tricky, the borrower should follow smart tricks while doing the prepayment in that way, he/she can save Many lakhs. Story first published: Wednesday, November 26, 2025, 12:36 [IST] Other articles published on Nov 26, 2025