வீட்டுல விசேஷம் வருதா? தங்கம் வாங்க நல்ல நேரம்!! இந்த வாய்ப்ப தவறவிட்டா வருத்தப்படுவீங்க!! – Allmaa

goldf78-1770266166

  செய்திகள்

வீட்டுல விசேஷம் வருதா? தங்கம் வாங்க நல்ல நேரம்!! இந்த வாய்ப்ப தவறவிட்டா வருத்தப்படுவீங்க!!

News oi-Devika Manivannan By Published: Thursday, February 5, 2026, 10:09 [IST] Share This Article

சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் குறைந்துள்ளது. வீட்டில் விசேஷம் உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்திருப்பவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கிக் கொள்வது நல்லது. ஏனெனில் உலக சூழல்கள் நாளைய தினம் தங்கத்தின் விலை என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதை உணர்த்துகின்றன.

கடந்த 29ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய் என வரலாற்று உச்சத்தில் இருந்தது. இதன்பிறகு வெள்ளி, சனி, திங்கள் என மூன்று நாட்களும் தலா 950 ரூபாய் என ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 320 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. புதன் கிழமையான நேற்று ஒரு கிராமுக்கு 630 ரூபாய் உயர்வு கண்டு 14,900 ரூபாய் என ஆனது.

வீட்டுல விசேஷம் வருதா? தங்கம் வாங்க நல்ல நேரம்!! இந்த வாய்ப்ப தவறவிட்டா வருத்தப்படுவீங்க!!

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டது என மக்கள் அச்சமடைந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 580 ரூபாய் விலை குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 4,640 விலை குறைந்திருக்கிறது . நேற்று ஒரு சவரன் 1,19,200 க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1 ,14, 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 5800 ரூபாய் விலை குறைந்து 1,43,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!! இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 634 ரூபாய் விலை குறைந்து 15,622 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 5072 ரூபாய் குறைந்து 1,24,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,56,220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் இன்று கிராமுக்கு 500 ரூபாய் விலை குறைந்து 12,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனை பொறுத்தவரை 98,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Recommended For Youதங்கம் வாங்குறதுல மக்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா? - புட்டு புட்டு வைக்கும் ரே டேலியோதங்கம் வாங்குறதுல மக்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா? – புட்டு புட்டு வைக்கும் ரே டேலியோ

இன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 300 ரூபாய்க்கு கிலோவுக்கு 20000 ரூபாய் குறைந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.உலக சந்தையில் தங்கம் விலை நேற்று ஏற்றம் கண்டு ஒரு அவுன்ஸ் 5000 டாலர்களை கடந்தது. ஆனால் இன்று காலை குறைந்தது. இந்த விலை மாற்றம் தான் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை , அமெரிக்க பொருளாதாரம், டிரம்பின் அறிவிப்புகள் என பல்வேறு காரணிகளும் தங்கம், வெள்ளி விலையை மாற்றுபவையாக இருக்கின்றன. இதில் எது நடந்தாலும் தங்கம் விலை உயரும். எனவே இன்றைய விலை குறைவை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் நிபுணர்கள்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Chennai Gold and Silver rate drops suddenly: here are the key price details

Surprisingly Gold and Silver rate in chennai drops today. After two days of raising the rates have plunged today. Here are the key price details Story first published: Thursday, February 5, 2026, 10:09 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி Other articles published on Feb 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *