வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:58 [IST] Share This Article
சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. தங்கம் விலை தற்போது திருத்தத்தில் இருப்பதாக முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் உயர்ந்த தங்கம் விலை நான்கு நாட்கள் சரிவை கண்டது . வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எப்படி இருக்குமோ என மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் விலை சரிவடைந்திருக்கிறது.

சென்னையில் நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 110 ரூபாய் விலை குறைந்து 11,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் 93,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 92,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 121 ரூபாய் விலை சரிந்துள்ளது. நேற்று 12,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கேரட் தங்கம் இன்று 12,567 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று 1,01,504 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 968 ரூபாய் விலை சரிந்து 1,00,536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மதுரை, கோவை, திருச்சியில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
தற்போது மக்களிடையே பிரபலமாகி வரும் 18 கேரட் தங்கமும் விலை சரிவில் இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் 90 ரூபாய் விலை குறைந்து 9,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் என பார்க்கும் போது 720 ரூபாய் விலை குறைந்து 76,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Also Read
தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்டு: 2020இல் செய்த ரூ.1 லட்சம் முதலீட்டின் இப்போதைய மதிப்பு என்ன?
வெள்ளி விலையும் மாற்றம் கண்டுள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்லது. நேற்று 172 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி இன்று 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை குறைந்து 1,71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஒரு நிலைத்தன்மை இல்லாமல் ஒரு ஏறுவது மறுநாள் இறங்குவது என காணப்படுகிறது. தங்கம் விலை அடுத்த ஒரு மாதத்திற்கு இதே போல தான் இருக்கும் என கூறும் நிபுணர்கள் விலை குறையும் போது அதனை வாய்ப்பாக கொண்டு தங்கம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்குகின்றனர். ஜனவரி மாதம் முதல் விலை ஏறுமுகமாக செல்லலாம் என கணிக்கின்றனர்.
Share This Article English summary
Gold rate suddenly plunges in Chennai: Here is how much one gram cost?
Gold rate suddenly plunges in Chennai. Gold rate see heavy volatile in November, experts says the price to remain volatile till 2025 end Story first published: Monday, November 24, 2025, 9:58 [IST] Other articles published on Nov 24, 2025