வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

  செய்திகள்

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

News oi-Devika Manivannan By Published: Sunday, November 16, 2025, 8:31 [IST] Share This Article

இந்தியாவில் அண்மைக்காலமாக உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மென் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.

இந்தியாவை சேர்ந்த டெக் நிறுவனமான ஜோஹோ ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ மெயில், வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை என பல்வேறு மென்பொருள் தயாரிப்புகளை மக்களுக்கு வழங்கி வந்தது. இவை நீண்ட காலம் சந்தையில் இருந்தாலும் மக்களிடையே பிரபலமடையாமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய அமைச்சர்கள் ஜோஹோ மெயில் பயன்படுத்த தொடங்கினர் . இதனால் ஜோஹோ நிறுவன தயாரிப்புகள் மக்களின் கவனம் பெற்றன.

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

உலக அளவில் தகவல் தொடர்புக்கு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் இருக்கிறது. அதற்கு நிகரான வசதிகள் கொண்ட ஜோஹோவின் அரட்டை செயலி இந்திய மக்களிடையே பிரபலமானது. ஏராளமானவர்கள் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். அக்டோபர் மாதம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே அரட்டை செயலி முதலிடத்தை பிடித்து அசத்தியது.

பலரும் சமூக வலைத்தளங்களில் நாங்கள் அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டோம் என தொடர்ச்சியாக கூறி வந்தனர் . இந்த நிலையில் அரட்டை செயலி பயன்பாட்டில் சில குறைபாடுகளையும் மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருந்தனர் . குறிப்பாக வாட்ஸ் அப்பை போல எண்டு டு – எண்டு என்கிரப்ஷன் (End to End encryption ) இதில் இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.

Also Readமெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

End to End encryption முறையில் ஒரு மெசேஜை அனுப்பிய நபரும் அதனை பெறும் நபரும் மட்டுமே அந்த மெசேஜை படிக்க முடியும். வாட்ஸ் அப் நிறுவனமே நினைத்தால் கூட அதனை படிக்க முடியாது மூன்றாவது நபர் அந்த மெசேஜை படிக்க முயன்றால் கோடாக தான் அது அவர்களுக்கு தெரியும். இதனால் தான் ஏராளமானவர்கள் இன்னும் நம்பிக்கையோடு whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். அதே போன்ற ஒரு வசதி அரட்டை செயலியில் ஏன் இல்லை என பலரும் புகார் கூறி வந்தனர்.

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . அரட்டை செயலியில் தங்களுடைய நிறுவனம் system wide end to end encryption முறைக்கு மாறுவதாக அறிவித்திருக்கிறார். வரக்கூடிய நாட்களில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என்றும் இது தங்களுக்கு ஒரு கட்டாயப்படுத்த அப்கிரேடாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார் .

அரட்டை செயலி அப்டேட் என்ற பெயரில் பதிவு வெளியிட்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு நாங்கள் அரட்டை செயலியில் system wide end to end encryptionஐ பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். நாங்கள் மிக தீவிரமான சோதனைகளை செய்து வருகிறோம். ஏனெனில் இது அந்த செயலியில் மிகப்பெரிய ஒரு மாற்றம் தற்போது நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய 6000 பேர் இந்த புதிய மாற்றத்தை சோதனை செய்து வருகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended For Youரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை - புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா?ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா?

சோதனையில் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் இருந்தது அவற்றை சரி செய்து இருக்கிறோம் என கூறியிருக்கும் அவர், அனைத்தையும் சரி செய்வோம் , இவை அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் அரட்டை செயலியில் system wide end to end encryption வந்துவிடும் எனக் கூறியிருக்கிறார் பயனாளர்கள் தங்களுடைய செயலியை அப்டேட் செய்து கொள்ளும் பட்சத்தில் இந்த வசதி அவர்களுக்கும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அரட்டை செயலி அதிகம் பயன்படுத்தப்படும் டாப் 100 செயலிகளின் பட்டியலில் இருந்து வெளியேறியது .இந்த சூழலில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஸ்ரீதர் வேம்பு எங்கள் செயலி முதலிடத்திற்கு வந்தபோது இது ஒரு தற்காலிகமானது தான் என்று நான் ஊழியர்களிடம் அப்போதே சொல்லிவிட்டேன் எனவே தற்போது சரிந்திருக்கிறது என்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

Share This Article English summary

WhatsApp-rival Arattai gets system-wide end-to-end encryption: Zoho Sridhar vembu

Sridhar Vembu announces system-wide end-to-end encryption for WhatsApp-rival Arattai. Here is what his X post says. Story first published: Sunday, November 16, 2025, 8:31 [IST] Other articles published on Nov 16, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *