வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள்

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article

இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.

உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரும் யுபிஐ பேமென்ட்களை பயன்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்தியிருக்கிறது . இதற்காக ஜூனியா பெமென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்திற்கு அனுமதி தந்திருக்கிறது.

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

இந்த நிறுவனம் யுபிஐ மேலாண்மை செய்யக்கூடிய என்பிசிஐ அமைப்புடன் இணைந்து குழந்தைகளுக்கான யுபிஐ வாலெட் என்ற கட்டமைப்பை உருவாக்க உள்ளது. எனவே இனி வங்கி கணக்கு இல்லை என்றாலும் கூட உங்களுடைய குழந்தைகளும் பதின்ம வயதினரும் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். நாம் எப்படி யுபிஐ செயலிகள் வாயிலாக ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறோமோ அதே போல இந்த வாலட்டை பயன்படுத்தி உங்களுடைய குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் யுபிஐ பயன்படுத்த முடியும்.

தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய யுபிஐ சர்க்கிளுக்கு நிகரான ஒரு வசதி தான் இது. இந்த ஜூனியர்யோ பேமென்ட் மூலம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் நிகழ் காலத்தில் நிதி மேலாண்மை குறித்த புரிதல்களும் உண்டாகும் என சொல்லப்படுகிறது.

Also Readகோடக் மகேந்திரா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! டிசம்பர் முதல் SMS Alertகளுக்கு கட்டணம்..!!கோடக் மகேந்திரா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! டிசம்பர் முதல் SMS Alertகளுக்கு கட்டணம்..!!

தங்களுடைய நிதியை பொறுப்பான முறையில் கையாள்வது சிறுவயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் , குறிப்பாக டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஜூனியோ செயலி வாயிலாக பெற்றோர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒரு கணிசமான தொகையை இந்த ஜூனியர் செயலியில் ஒரு வாலட்டை உருவாக்கி செலுத்தி விட வேண்டும்.

Recommended For Youகுழந்தைகளோட ரயில்ல பயணம் செய்ய போறீங்களா?- IRCTCஇன் இந்த விதிமுறையை முதல்ல படிங்க..!குழந்தைகளோட ரயில்ல பயணம் செய்ய போறீங்களா?- IRCTCஇன் இந்த விதிமுறையை முதல்ல படிங்க..!

ஒரு பரிவர்த்தனைக்கு இவ்வளவு என லிமிட் கூட நிர்ணயம் செய்து கொள்ளலாம். எனவே குழந்தைகள் அல்லது பள்ளி மாணவ மாணவிகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு தேவையான ஒரு பொருளை வாங்கும்போது இந்த செயலி வாயிலாக அந்த பணத்தை யுபிஐ மூலம் செலுத்தி விட முடியும். தற்போதைக்கு ரிசர்வ் வங்கி இதற்கான கட்டமைப்பை உருவாக்க அனுமதி தந்துள்ளது.

Share This Article English summary

Very soon kids and teens can use UPI without having bank account

Reserve Bank of India has granted in-principle approval to Junio Payments Pvt Ltd to issue Prepaid Payment Instruments (PPIs) paving the way for UPI-linked wallet for kids and teens. Story first published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Other articles published on Nov 11, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *