லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 8:41 [IST] Share This Article
டெல்லி: இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது விடுமுறை நாட்களிலும் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் மேலாளர்கள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் அலுவலக ரீதியான விஷயங்களுக்காக போன் செயவது அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவது.
தனியார் நிறுவனங்களில் அலுவலக நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருந்தாலும் அதனை முடித்துவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பிய பின்னரும் மேனேஜர்கள் பணி ரீதியாக போன் கால் செய்வது என்பது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் ஆளாகின்றனர். விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் போதும் கூட மேனேஜர் போனில் அழைப்பதும், மின்னஞ்சல் அனுப்புவதும் வாடிக்கையாக உள்ளது.

பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அலுவலக நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் மின்னஞ்சல் வருவது, செல்போன் அழைப்புகள் வருவதும் பெரும் மன உளைச்சலை தருகிறது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என வருந்துகின்றனர். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமானால் வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் அலுவலக நேரம் முடிந்த பின்னர் மற்றும் விடுமுறை நாட்களில் அலுவலகத்தில் இருந்து வரக்கூடிய செல்போன் அழைப்புகளை ஏற்காமல் தவிர்க்கலாம் மேலும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை .இது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்படுத்தி தரும்.
Also Read
தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!!
சரவ்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே மக்களவையில் right to disconnect bill 2025 என்ற பெயரில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த தனிநபர் மசோதாவில் ஊழியர்கள் பணி நேரத்திற்கு பின்னரும் அலுவலகங்களில் இருந்து வரும் பணி தொடர்பான அழைப்புகளுக்கோ மின்னஞ்சல்களுக்கோ பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்படும் என கூறுகிறது .
Recommended For You
மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!
ஊழியர்கள் வேலை முடித்து வீட்டுக்கு சென்ற பின்னரும் அல்லது விடுமுறை நாட்களிலும் பணி தொடர்பான அழைப்புகள் வரும்போது அதனை நிராகரிக்கலாம். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் . வழக்கமாக பல தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் அதில் ஒரு சில மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். அந்த வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தனியார் நிறுவன ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
Share This Article English summary
What is Right to Disconnect Bill? Why is it important for private employees?
The Right to Disconnect Bill, 2025 was introduced in the Lok Sabha on Saturday, aiming to give employees the legal right to ignore work calls, messages, and emails beyond office hours. Story first published: Sunday, December 7, 2025, 8:41 [IST] Other articles published on Dec 7, 2025
