ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

  வகுப்புகள்

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

Classroom oi-Devika Manivannan By Published: Thursday, November 20, 2025, 16:39 [IST] Share This Article

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள். பல்வேறு குடும்பங்களும் ரேஷனில் கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை ,பருப்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் தங்களின் உணவு தேவையே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

ரேஷன் அட்டை வகைகளுக்கு ஏற்ப இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவையும் மானிய விலையில் பல்வேறு பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. இது கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பசியை போக்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரேஷன் கடையில் தொடர்ச்சியாக இலவச அரிசி உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும் என்றால் ஈ- கேஒய்சி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச அல்லது மானிய விலையில் தொடர்ந்து ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஈ கேஒய்சி செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . டைம்ஸ் புல் இணையதள பக்கத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகியிருக்கிறது. பொதுமக்கள் இந்த kyc-ஐ தங்கள் வீடுகளில் இருந்தபடியே முடித்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சரியான பயனாளிகளுக்கு தான் இந்த பலன்கள் சென்று சேர்கின்றன என்பதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது கேஒய்சி சரிபார்ப்பு என்பது செய்யப்படுகிறது. அதாவது ரேஷன் அட்டையில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டு சரி பார்ப்பது தான் இந்த கேஒய்சி நடைமுறை .

Also Readபான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

இந்த நிலையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஈ – கேஒய்சி செய்தால் தான் அவர்களுக்கு வழக்கம் போல இந்த இலவச பொருட்களும் மானிய விலை பொருட்களும் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுமக்கள் இதற்காக எங்கேயும் செல்ல வேண்டிய தேவையில்லை.

Mera eKYC App மற்றும் Aadhaar Face RD ஆகிய இரண்டு செயலிகள் வாயிலாக தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த ஈ கேஒய்சி நடைமுறையை முடித்துக் கொள்ளலாம். முதலில் இதற்கு உங்கள் போனில் மேலே கூறிய 2 செயலிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . Mera eKYC செயலியை நீங்கள் பதிவிறக்கம், செய்து ஓபன் செய்ய வேண்டும். அதில் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

Recommended For Youஅரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?

இதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதனை உள்ளிட்ட வேண்டும். ஓடிபி உள்ளிட்ட உங்களின் விவரங்கள் அதில் காட்டும் அவற்றை சரிபார்த்த பின்னர் ekyc என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய போனில் கேமரா ஓபன் ஆகும். அந்த கேமரா உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்யும். உங்கள் போனில் ஏற்கனவே இருக்கும் Aadhaar Face RD செயலி முக அடையாள சரிபார்ப்பை தானாகவே செய்யும்.

இதனை அடுத்து நீங்கள் சப்மிட் கொடுத்து விட வேண்டும். உங்களுடைய ரேஷன் கார்டு ஈ கேஒய்சி முடிந்தது. இது சக்ஸஸ் ஆனதா இல்லையா என்பதை மீண்டும் ஒருமுறை லாகின் செய்து ஸ்டேடட்ஸ் என்பதை கிளிக் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.

Share This Article English summary

E-kyc must to get all benefits in your ration card- Here is how to do it?

To continue receiving free rations under the National Food Security Act (NFSA), it will now be mandatory to complete e-KYC every five years. Learn how to complete e-KYC at home . Story first published: Thursday, November 20, 2025, 16:39 [IST] Other articles published on Nov 20, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *