ரூ.9.19 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கதறல்.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது..!!
Market Update oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, January 8, 2026, 21:06 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1,581 புள்ளிகள் சரிந்துள்ளது, இதேபோல் நிப்டி 50 குறியீடு 1.7 சதவீதம் சரிவைப் பதிவு செய்தது.
இந்த மோசமான சரிவுக்கு உள்நாட்டு காரணிகளை காட்டிலும் சர்வதேச சந்தை காரணிகள் தான் மிகவும் முக்கியமான காரணமாக இருந்துள்ளது.

4 நாட்களாக பங்குச்சந்தையில் பதிவான சரிவு உலக அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் மற்றும் நிறுவனங்களின் மந்தமான வருவாய் கணிப்புகள் போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர்.
2026ஆம் நிதியாண்டின் 2ஆம் பாதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் என்ற கணிப்பு முதலீட்டாளர்களின் எச்சரிக்கையாக முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தையும், லாபத்தை திரும்ப எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கியது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) 2026 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதம் விரிவடையும் என்று கணித்துள்ளது. இது ஐசிஆர்ஏ கணிப்பிற்கு சமமாக உள்ளது.
இதனால் 2026ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மந்தமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஆர்ஏவின் கணிப்பின்படி, முதல் பாதியில் 8.0 சதவீதம் இருந்த வளர்ச்சியும், இரண்டாம் பாதியில் 6.9 சதவீதமாக குறையலாம் என கணித்திருந்தது. இந்த மந்தநிலை உள்நாட்டு பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தி, நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் சரிவு ஏற்படும் என கவலை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 780.18 புள்ளிகள் சரிந்து 84,180.96 என்ற அளவில் முடிவடைந்தது. நிப்டி50 குறியீடு 263.90 புள்ளிகள் குறைந்து 25,876.85 அளவில் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் கடந்த 4 நாட்களில் 9.19 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 472 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
டிரம்பின் ரஷ்யா வரி மசோதா:
உள்நாட்டு பாதிப்புகளை தாண்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை முடக்கும் நோக்கில் இதை வாங்கும் நாடுகளுக்கு குறைந்தபட்சம் 500 சதவீதம் வரி விதிக்கும் இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அடுத்த வாரத்தில் இது அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் தள்ளுபடி விலை எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
ஏற்கனவே வெனிசுலா கச்சா எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது, தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய்யை கட்டுப்படுத்த 500% சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் எண்ணெய் இறக்குமதி நாடுகள் அனைத்திற்கும் பாதிப்பு.ய
வெனிசுலா தாக்குதல்:
வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் கமாடிட்டி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு உலக எண்ணெய் விலைகளில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவின் பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது.
Share This Article English summary
Sensex, Nifty 50 drop: Stock Market investors lost Rs 9.19 lakh crore MCAP in 4 days
Sensex, Nifty 50 drop: Stock Market investors lost Rs 9.19 lakh crore MCAP in 4 days Story first published: Thursday, January 8, 2026, 21:06 [IST] Other articles published on Jan 8, 2026
