ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 11, 2025, 18:08 [IST] Share This Article
உங்களிடம் 4000 கோடி ரூபாய் கொடுக்கிறோம் என சொன்னால் உடனே என்ன தோன்றும்? அப்பாடா கடனை அடைச்சிடலாம் நல்லா ஒரு பங்களாவ கட்டி சொகுசா வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தான் தோன்றும். அப்படி என்றால் கோடிக்கணக்கிலான பணம் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்கிறார் 4,680 கோடிக்கு அதிபதியான ஒரு நபர்.
பிரிட்டனை சேர்ந்த தொழில் முனைவோர் தான் டாம் குரோகன். இவர் தி விங் ஸ்டாப் என்ற உணவு விற்பனை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை 4680 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்து விட்டார். தற்போது இவர் கையில் 4,680 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் இவர் வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது புதிதாக தொழில் தொடங்க வேண்டும் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமே கிடையாது .

இந்த பணத்தை எல்லாம் செலவு செய்தாலே போதும் . இந்த பணம் வந்த பிறகு நம்முடைய வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது ஒரு இனி நாம் வேலை, மீட்டிங் என அலைய தேவையில்லை, ஆடம்பரமான நிம்மதியான சொகுசான ஒரு வாழ்க்கை வாழலாம் என நினைத்தேன், ஆனால் தற்போது என்னிடம் இருப்பதெல்லாம் வெறுமை தான் என கூறுகிறார். என்னிடம் பெரிய அளவு சொத்து இருக்கிறது ஆனால் வாழ்க்கையில் ஒரு அதிருப்தியுடன் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக என்னுடைய நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமாக நான் உழைத்தேன் , நாள் முழுவதும் நிறுவனத்தையும் தொழிலையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் செலவு செய்தேன். திடீரென நான் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய தேவையில்லை என்ற சூழல் வந்துவிட்டது பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை வந்து விட்டது ஆனால் தற்போது இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை மாறாக ஒருவித தனிமை உணர்வும் வெறுமை உணர்வும் என்னை ஆக்கிரமித்து இருக்கிறது என்க கூறியுள்ளார்.
Also Read
பொறாமையும், பேராசையும் கை கோர்த்து நடக்கின்றன – எலான் மஸ்கை சாடும் வாரன் பஃபெட்..!!
இப்போது என்னுடைய உலகமே முற்றிலும் மாறிவிட்டது நான் இனி பணம் சம்பாதிக்க தேவை இல்லை ,ஆனால் இருக்கக்கூடிய பணத்தை பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது ,இருக்கும் பணத்தை மேலாண்மை செய்வது ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் . ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கை போரடிக்கிறது என கூறுகிறார் . என்னால் ஒரு கடற்கரையில் நிம்மதியாக அமர்ந்து இயற்கை ரசிக்க முடியவில்லை ஏதேனும் ஒன்று செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது என்கிறார்.
Recommended For You
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
எனவே நிதி சார்ந்த சுதந்திரம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்து விடாது என்பதற்கு இந்த நபரே ஒரு உதாரணம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் மகிழ்ச்சி என்பது அந்தந்த நபரின் மனநிலையை பொறுத்து தான் அமையும் தவிர அவரிடம் இருக்கும் பணம் வைத்து ஒருபோதும் முடிவு செய்ய முடியாது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சித்தார்த் சங்கர் என்ற பிரிட்டன் தொழில்முனைவோரும் இதே போன்ற ஒரு விஷயத்தை பகிர்வு செய்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தன்னுடைய நிறுவனத்தை 500 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்த அவர் திடீரென எந்த வேலையும் இல்லை 15 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை செய்து வந்தேன் என்னிடம் இப்பொழுது நிறைய பணம் இருக்கிறது ஆனால் அதில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என கூறி இருந்தார்.
Share This Article English summary
UK entrepreneur with ₹4,680 crore net worth says life is empty after early retirement
The Wingstop UK co-founder, Tom Grogan who sold a majority stake in his company for £400 million (around ₹4,680 crore), says that despite the massive windfall, retirement didn’t feel fulfilling. Story first published: Tuesday, November 11, 2025, 18:07 [IST]