ரூ.27 லட்சம் கடனை அடைத்து ரூ.27 கோடி சம்பாதித்தது எப்படி? இளைஞர் பகிரும் ரகசியம்!!

young2-1770030356

  செய்திகள்

ரூ.27 லட்சம் கடனை அடைத்து ரூ.27 கோடி சம்பாதித்தது எப்படி? இளைஞர் பகிரும் ரகசியம்!!

News oi-Devika Manivannan By Published: Monday, February 2, 2026, 16:37 [IST] Share This Article

இளம் வயதிலேயே கடன் வலையில் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அதுவும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன் வலையில் சிக்கிக் கொண்டால் அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காகவே ஓட வேண்டி இருக்கும். நம்முடைய கனவை நோக்கியோ நமக்கு பிடித்த வேலையை நோக்கியோ நிச்சயம் செல்லவே முடியாது.

அப்படி 27 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்த ஒரு நபர் அந்த கடனை முழுமையாக அடைத்ததோடு மட்டுமல்லாமல் 27 கோடி ரூபாய்க்கு முதலாளியாக மாறி இருக்கிறார். அதுவும் தன்னுடைய 30 வயதுக்குள்ளாகவே இவை அனைத்தும் நடந்ததாக கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்று ரகசியத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

ரூ.27 லட்சம் கடனை அடைத்து ரூ.27 கோடி சம்பாதித்தது எப்படி? இளைஞர் பகிரும் ரகசியம்!!

ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டு இருக்கும் தகவலில், என்னுடைய 20களின் தொடக்கத்தில் நான் பெரிய கடனாளியாக இருந்தேன் ஆனால் தற்போது எனக்கு 30 வயது ஆகப்போகிறது 26 கோடியை சொந்தமாக வைத்திருக்கிறேன் என கூறியிருக்கிறார். ஒரு கடனாளியாக இருந்து எப்படி கோடீஸ்வரன் ஆனேன் என்பதையும் அவர் விளக்கி இருக்கிறார்.

நான் டெல்லியில் வளர்ந்தவன், 17 வயதாகும்போது டெல்லியில் இருந்து கனடாவுக்கு சென்று விட்டேன். அங்கே நான் என்னுடைய படிப்பை முடித்தேன். எனக்கு தந்தை இல்லை தாயார் மட்டுமே இருக்கிறார் எனக் கூறியிருக்கும் அவர் படிப்புக்காக தான் நான் கனடாவுக்கு சென்றேன் என தெரிவித்துள்ளார். அங்கே படிப்போடு சேர்ந்து சேல்ஸ் சம்பந்தப்பட்ட வேலையில் சேர்ந்தேன். நல்ல சம்பளம் கிடைத்தது, ஆனால் அப்போது பேராசையும் வந்தது என கூறியுள்ளார்.

ரூ.27 லட்சம் கடனை அடைத்து ரூ.27 கோடி சம்பாதித்தது எப்படி? இளைஞர் பகிரும் ரகசியம்!!

23 வயதிலேயே என் கையில் இருந்த பணத்தை எல்லாம் நான் இழந்து விட்டேன் நான் செய்த தப்பு என்ன தெரியுமா ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷனில் டிரேடிங் செய்தேன் இதில் என்னிடம் இருந்த பணம் அனைத்தும் கைமீறி சென்று விட்டது கடன் வாங்கி நான் டிரேடிங் செய்தேன் அதையும் இழந்துவிட்டேன், 23 வயதில் 30 ஆயிரம் டாலர்கள் கடனாளியாக நான் இருந்தேன் அந்த சமயத்தில் என்னிடம் பணம் இல்லை என் உடல் நலனும் கெட்டுவிட்டது மிக மோசமான ஒரு நிலைமையில் நான் இருந்தேன் ராத்திரி நேரத்தில் தூக்கமே வராது என கூறியுள்லார்.

Also Readபெற்றோரே உஷார்!! மோமோவுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை தூக்கி கொடுத்த சிறுவன்!! இப்படி கூட மோசடி நடக்குது!!பெற்றோரே உஷார்!! மோமோவுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை தூக்கி கொடுத்த சிறுவன்!! இப்படி கூட மோசடி நடக்குது!!

அடுத்த என்ன செய்வது என சிந்தித்து கொண்டு இருந்தேன் இதனை அடுத்து youtube contentகளை உருவாக்கி பதிவு செய்ய தொடங்கினேன். டிக் டாக், இன்ஸ்டாகிராம் தளங்களிலும் கண்டன்ட் பதிவு செய்தேன். 25 வயது ஆகும்போது எனக்கு இந்த கன்டண்ட் கிரியேஷன் மூலம் வருமானம் கிடைக்க தொடங்கியது. அவ்வாறு எனக்கு வந்த பணத்தை கொண்டு ஏஐ சம்பந்தப்பட்ட ப்ராஜெக்ட்டுகள் செய்தேன், ரெண்டல் நிறுவனம் ஒன்றை நடத்தினேன் என்கிறார்.

Recommended For Youபரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?பரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?

பங்குச்சந்தை பக்கமே போகவில்லை அதற்கு மாற்றாக தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தேன். எனக்கு 29 வயது ஆகிறது நான் என்னுடைய ரெண்டல் பிசினஸை 3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து விட்டேன். இப்போது என்னிடம் 27 கோடி ரூபாய் பணம் இருக்கிறது கடனாளியாக இருந்த நான் தற்போது கோடீஸ்வரனாக மாறி இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த நான் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை அதுதான் என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். தயவு செய்து ஆப்ஷன்ஸ் ஃபியூச்சர்ஸ் குறித்து முழுமையாக தெரியாமல் இறங்காதீர்கள் என்றும் அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

Share This Article English summary

From Rs 27 Lakh Debt to Rs 27 Crore Riches: Young Man’s Strategy Before 30

A Reddit user shared his inspiring journey from bankruptcy at age 23—with $30,000 (about Rs 27 lakh) in debt from failed day trading—to amassing Rs 27 crore by 29. Story first published: Monday, February 2, 2026, 16:37 [IST] Other articles published on Feb 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *