ரூ.200க்குள் மெகுல் கோத்தாரி பரிந்துரைக்கும் 3 ஜாக்பாட் பங்குகள்! குறைந்த விலையில் செம சான்ஸ்! – Allmaa

befunky-collage-2026-01-24t170047-643-1769254296

  Market update

ரூ.200க்குள் மெகுல் கோத்தாரி பரிந்துரைக்கும் 3 ஜாக்பாட் பங்குகள்! குறைந்த விலையில் செம சான்ஸ்!

Market Update oi-Pugazharasi S By Published: Saturday, January 24, 2026, 17:01 [IST] Share This Article

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் சரிவை சந்திக்கும் போதெல்லாம், சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் தேடுவது தரமான பங்குகளை குறைந்த விலையில் எங்கு வாங்கலாம் என்பதை தான். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தை சவாலான சூழலில் இருந்தாலும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் பங்குகள் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்கிறார் ஆனந்த் ரதி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி துணைத் தலைவர் மெகுல் கோத்தாரி.

சந்தையின் தற்போதைய போக்கை கணித்துள்ள அவர், ரூ.200-க்கும் குறைவான விலையில் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள 3 முக்கிய பங்குகளை அடையாளம் காட்டியுள்ளார். குறிப்பாக ஐடிபிஐ வங்கி (IDBI Bank), ஐஎஃப்சிஐ (IFCI) மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரூ.200க்குள் மெகுல் கோத்தாரி பரிந்துரைக்கும் 3 ஜாக்பாட் பங்குகள்! குறைந்த விலையில் செம சான்ஸ்!

மூன்று பங்குகள் பரிந்துரை!

நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருந்தாலும் அல்லது உங்கள் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த நினைப்பவராக இருந்தாலும், வெறும் 200 ரூபாய்க்குள் கிடைக்கும் இந்த பங்குகள் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். கோத்தாரி பரிந்துரைத்துள்ள அந்த 3 பங்குகளின் இலக்கு விலை மற்றும் ஸ்டாப் லாஸ் விவரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

இலக்கு விலை & ஸ்டாப் லாஸ்

ஐடிபிஐ வங்கியின் பங்கை 95 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிபுணர், இலக்கு விலையை 105 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ்-ஐ 88.50 ரூபாயாகவும் கொடுத்துள்ளார். இப்பங்கானது நீண்ட கால சரிவுக்குப் பிறகு, 88-90 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த கட்டத்தில் ஒரு முக்கிய ஆதரவை எடுத்துள்ளது. மேலும் அரசின் பங்குகளை விற்பனை செய்யும் (Disinvestment) செய்திகள், இந்த பங்கிற்கு ஒரு உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஐஎஃப்சிஐ: இப்பங்கை 55 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிபுணர், இலக்கு விலையை 65 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் விலையை 48.50 ரூபாயாகவும் கணித்துள்ளார். இது ஒரு குறைந்த விலை பங்காக இருந்தாலும், சமீபத்திய வர்த்தகத்தில் அதிக வால்யூம்களுடன் காணப்படுகிறது.

பேங்க் ஆப் இந்தியா: இவ்வங்கி பங்கை 155 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிபுணர், இலக்கு விலையை 168 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 143 ரூபாயாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். டெக்னிக்கலாக இப்பங்கானது சப்போர்ட் விலையை உடைத்து விட்டு மீண்டும் அதே இடத்திற்கு ஆதரவு எடுக்க வந்துள்ளது. அங்கிருந்து ஒரு வலுவான ‘பவுன்ஸ் பேக் எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Top 3 Stocks Under Rs 200: Anand Rathi’s Mehul Kothari Reveals His Top Buy Picks Amid Market Volatility

Expert Mehul Kothari recommends three stocks under Rs 200, including IDBI Bank and IFCI, offering high-potential returns despite FII outflows and current stock market volatility. Story first published: Saturday, January 24, 2026, 17:01 [IST] Other articles published on Jan 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *