ரூ.1 லட்சம் கோடி கிளப்பில் இணைந்த 110 நிறுவனங்கள்: முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 2025! – Allmaa

befunky-collage82-1766401562

  Market update

ரூ.1 லட்சம் கோடி கிளப்பில் இணைந்த 110 நிறுவனங்கள்: முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 2025!

Market Update oi-Pugazharasi S By Published: Monday, December 22, 2025, 16:36 [IST] Share This Article

இந்திய பங்குச் சந்தையானது நடப்பு ஆண்டில் ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட, முதலீடுகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 97 ஆக இருந்த லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 110 ஆக உயர்ந்துள்ளது. இது பார்ப்பதற்கு வெறும் எண்களாக தோன்றலாம். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையில், இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான ஒரு மறைமுக சான்றாகவும் பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையை பெற்றுள்ள இந்த நிறுவனங்கள், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் சாதனை படைத்துள்ளது. இந்த அசுர வளர்ச்சி பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என விரிவாக பார்க்கலாம்.

ரூ.1 லட்சம் கோடி கிளப்பில் இணைந்த 110 நிறுவனங்கள்: முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 2025!

முக்கிய பங்கு?

நடப்பு ஆண்டில் இதுவரையில் 110 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. பி எஸ் இ-ல் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த சந்தை மதிப்பில் இந்த 110 நிறுவனங்கள் மட்டுமே 62% பங்கைக் கொண்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. கடந்த சில வருடங்களாக சீராக அதிகரித்து வந்த நிறுவனங்களின் மூலதனம், நடப்பு ஆண்டில் 100-க்கும் மேல் லட்சம் கோடியை தாண்டிய கிளப்பில் இணைந்துள்ளன.

டாப் நிறுவனங்கள் எவை?

தொடர்ந்து பல நிறுவனங்கள் லட்சம் கோடியை தாண்டி இருந்தாலும் முதல் மூன்று இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில், வழக்கம்போல ரிலையன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ. 20.89 லட்சம் கோடி )

2. ஹெச்.டி,எஃப்.சி வங்கி (ரூ. 15.07 லட்சம் கோடி)

3. பார்தி ஏர்டெல் (12.75 லட்சம் கோடி)

நிபுணரின் கருத்து என்ன?

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி குறித்து நிபுணரான அஜய் பக்கா கூறுகையில், 2025ம் ஆண்டில் லார்ஜ் கேப் பங்குகள் மற்றும் மெகா கேப் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி காணவில்லை. இதனால் பல முன்னணி குறியீடுகள் உச்சத்தில் இருந்தாலும், பல முதலீட்டாளர்களின் போர்ட்போலியோக்கள் அழுத்தத்தில் உள்ளன என கூறியுள்ளார்.

லட்சம் கோடி கிளப்பில் புதிய நிறுவனங்கள்?

நடப்பு ஆண்டில் புதிதாக 20 நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்துள்ளன. அதில் முக்கியமாக ஐபிஓ மூலம் இப்பட்டியலில் இணைந்த நிறுவனங்கள்:

1.எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்

2.டாடா கேபிடல் (Tata capital)

3.க்ரோ (Groww)]

4.மீஸோ (Meesho)

ஏற்கனவே சந்தையில் இருந்து இந்த கிளப்பில் இணைந்த நிறுவனங்களில் முத்தூட் பைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ், கனரா வங்கி, வோடபோன் ஐடியா, யூனியன் வங்கி, டாடா கன்ஸ்யூமர், கம்மின்ஸ் இந்தியா, ஹெச்,டி.எஃப்.சி ஏஎம்சி,ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பி எஸ் இ (BSE) போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

வாய்ப்புள்ள நிறுவனங்கள்?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ( HPCL), மசகான் டாக் (Mazagon Dock), பி.ஹெச்.இ.எல் (BHEL), மாரிகோ மற்றும் ஜைடஸ் லைஃப்சயின்ஸ், ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், பிபி ஃபின்டெக், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீ சிமெண்ட், எஸ்.ஆர்.எஃப் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் விரைவில் ஒரு லட்சம் கோடி மதிப்பை எட்டும் நிலையில் உள்ளன.

சரிந்த நிறுவனங்கள்?

அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் பட்டியலில் இடம்பெற்ற 12 நிறுவனங்கள், அவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட திருத்தங்கள் காரணமாக அந்த வரம்புக்கு கீழே சரிந்தன. அவற்றில் REC, மேன்கைண்ட் பார்மா, இன்ஃபோ எட்ஜ் (இந்தியா), ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி (JSW Energy), ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் சாப்ட்வேர், டிக்சன் டெக்னாலஜிஸ், லூபின், NTPC கிரீன் எனர்ஜி, பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஹேவல்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

Share This Article English summary

110 companies cross Rs 1 lakh crore: What’s driving India’s market surge in 2025?

In 2025, India’s market cap surged, with 110 companies crossing the Rs .1 lakh crore mark. This growth reflects a strong economy, led by giants like Reliance and new IPO stars like Meesho. Story first published: Monday, December 22, 2025, 16:36 [IST] Other articles published on Dec 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *