ரயில் பயணிகளுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ்!! வெயிட்டிங் லிஸ்ட்ல இனி காத்திருக்க வேண்டாம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 16:15 [IST] Share This Article
இந்தியாவில் முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு பெரிய தலைவலி டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என்பது தான். தற்போது காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் காத்திருக்கக்கூடிய பயணிகளுக்கு மிகப் பெரிய ஒரு நிவாரணம் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் அதிகமான மக்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பதும் அது கன்ஃபார்ம் ஆவதும் மிகவும் கடினம். அந்த வகையில் காத்திருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய டிக்கெட் எப்பொழுது கன்ஃபார்ம் ஆகும் என்பதற்காக அட்டவணை தயார் செய்யும் நேரம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.

அட்டவணையில் தங்களுடைய டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்துதான் அவர்கள் பயணத்திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சூழலில் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக இந்திய ரயில்வே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது . இதன்படி ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட் முன்பதிவு நிலையை ரயில் புறப்படுவதற்கு பத்து மணி நேரங்களுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ளும் வகையில் அட்டவணை வெளியிடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
Also Read
ரயில் பயணிகள் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம்? – ரயில்வே அமைச்சர் பதில்
ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது . இருந்தாலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் பதிவாகிவிடும் . அந்த சமயங்களில் காத்திருப்பு பட்டியலில் நம்முடைய டிக்கெட் இருக்கும். யாரேனும் ரத்து செய்தால் அதற்கேற்ப காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு அந்த டிக்கெட் ஒதுக்கப்படும்.

இவ்வாறு முன் பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டது . கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் முன்பதிவு அட்டவணையை ரயில் புறப்பட 8 மணி நேரத்திற்கு முன் வெளியிட வேண்டுமென பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது .
இதனை அடுத்து கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 8 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை வெளியிட்டு வெளியிடப்படுகிறது. தற்போது அதனை பத்து மணி நேரமாக நீட்டித்துள்ளனர் . இதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிப்பு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended For You
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?
இதேபோல மற்ற ரயில்களுக்கும் அவை புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ரயில்வே வாரியம் அனைத்து ரயில் பிரிவுகளுக்கும் உத்தரவு அனுப்பிட்டு அனுப்பி இருக்கிறது. எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் நிலையை அறிந்து பயண திட்டத்தை மேற்கொள்ளலாம்.
Share This Article English summary
No More Last-Minute Waitlist Worries: Railways Prepares Charts 10 Hours Early
Indian Railways has revised its reservation chart preparation timing to enhance passenger convenience by providing earlier updates on ticket status. Story first published: Thursday, December 18, 2025, 16:15 [IST] Other articles published on Dec 18, 2025
