ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!! – Allmaa

train30-1766634355

  செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!!

News oi-Devika Manivannan By Published: Thursday, December 25, 2025, 9:22 [IST] Share This Article

பொதுமக்கள் எளிமையாகவும் சௌகரியமாகவும் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் , ரயில் டிக்கெட் அவர்களுக்கு எளிமையாக கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தில் கணக்கு வைத்து டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு தங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அங்கீகார சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது. இவ்வாறு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் சரிப்பார்ப்பை முடித்தவர்களுக்கு தட்கல் மற்றும் பொது டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!!

தற்போது ரயில் டிக்கெட்டுகளை பயணத்தின் 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை Advance reservation period என அழைக்கிறார்கள். இந்த Advance reservation period தொடங்கும் முதல் நாளில் ஆதார் அங்கீகாரம் முடித்த ஐஆர்சிடிசி பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதிக்குள் படிப்படியாக இந்த நேரமாற்றம் அமலுக்கு வரும் என ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .

Advance reservation period இன் முதல் நாளில் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என முதலில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதனை காலை 8 மணி முதல் 10 மணி வரை என நீட்டித்தனர். தற்போது இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!!

இந்த கால நீட்டிப்பு என்பது டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கி படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . அதாவது டிக்கெட் முன்பதிவு பலன்கள் உண்மையான பயணிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மோசடி நபர்கள் மற்றும் ஏஜென்ட்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்திருக்கிறது.

Also Readபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?

இதன்படி ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனாளர்கள் ஜெனரல் ரிசர்வேஷனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாள் முழுவதுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். இது குறித்து அனைத்து மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில் ஏற்கனவே கூறியதைப் போல ஆதார் அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு கொண்டவர்களுக்கு டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை விரிவாக்கம் செய்யப்படுகிறது என கூறியுள்ளது.

Recommended For Youரயில் பயணிகள் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம்? - ரயில்வே அமைச்சர் பதில்ரயில் பயணிகள் எத்தனை கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம்? – ரயில்வே அமைச்சர் பதில்

எனவே ஆதார் அங்கீகாரம் முடித்த ஐஆர்சிடிசி பயனர்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து காலை 8:00 மணி முதல் 12 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் . ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து இது காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நீடிக்கப்படுகிறது. ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து இது காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை என நீட்டிக்கப்பட உள்ளது.

Share This Article English summary

IRCTC Train ticket Bookings: Major Changes from Dec. 29

Indian Railways has updated its ticket booking rules for Aadhaar-authenticated IRCTC users to extend the mandatory verification window on the first day of advance reservations. Story first published: Thursday, December 25, 2025, 9:22 [IST] Other articles published on Dec 25, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *