ரயில்வே வேலை தான் உங்களோட கனவா? 22,000 காலி பணியிடங்களை நிரப்பும் இந்திய ரயில்வே!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 11:13 [IST] Share This Article
மத்திய அரசு பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு மக்களிடம் எப்பொழுதுமே மவுசு அதிகம் . எப்படியாவது ரயில்வேயில் ஒரு வேலை வாங்கி விட்டால் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது என லட்சக்கணக்கானவர்கள் பாடுபடுகின்றனர்.
ரயில்வே வேலை என்றாலே கை நிறைய சம்பளம், தங்குவதற்கு குடியிருப்பு, பண்டிகை கால போனஸ், பயண சலுகைகள் ஆகியவை கிடைக்கின்றன. இதனால் தான் இந்த வேலைகளுக்கு போட்டி அதிகம். அப்படி ரயில்வேயில் எப்படியாவது ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என காத்திருப்பவர்களுக்காகவே ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்களை ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் தான் நிரப்பி வருகிறது . அந்த வகையில் ஆர்ஆர்பி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் உற்று கவனிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிக முக்கியமான ஒரு அறிவிப்பை ஆர்ஆர்பி வெளியிட்டு இருக்கிறது.
குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆர்ஆர்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 20ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்திருக்கிறது. மொத்தமுள்ள 22 ஆயிரம் காலி பணியிடங்களில் தண்டவாளர் பராமரிப்பாளர் கிரேடு 4 பணியில் மட்டும் 11 ஆயிரம் காலியிடங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது .
Also Read
ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!!
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு சம்பள கமிஷன் 7இன் ஆரம்ப அடிப்படை சம்பளமே 18,000 ரூபாயாக இருக்கும் . விரைவில் எட்டாவது சம்பள கமிஷனின்படி சம்பளம் உயரப்போகிறது என்பதால் இந்த பணிகளின் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கப் போவது உறுதி . 18 வயது முதல் 33 வயது உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஆன்லைன் வாயிலாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும் ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 18 முதல் 33 வயது குற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
Recommended For You
மக்களே இதை எல்லாம் முடிக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள்!! முதல்ல இந்த Checklist பாருங்க!!
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தளர்வும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்சவரம்பில் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது .முதலில் கணினி முறையில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். இதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து பணி ஒதுக்கப்படும்.
Share This Article English summary
Railway job alert: 22000 vacancies to be filled – here are the important dates
The Railway Recruitment Board (RRB) Recruitment 2026 for 22000 posts of Group D. Candidates with ITI, 10TH Can Apply Online. The online application opens on 20-01-2026, and closes on 20-02-2026. Story first published: Thursday, December 25, 2025, 11:13 [IST] Other articles published on Dec 25, 2025
