யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள்

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

News oi-Devika Manivannan By Published: Thursday, November 6, 2025, 10:06 [IST] Share This Article

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விலை இறங்கிய தங்கம் இன்றைய தினம் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 11,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 70 ரூபாய் உயர்வு கண்டு 11,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 89 , 440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டு 90,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 1 – ரூ.90,480

நவம்பர் 2 – ரூ.90,480

நவம்பர் 3 – ரூ.90,800

நவம்பர் 4 – ரூ.90,000

நவம்பர் 5 – ரூ.89,440

நவம்பர் 6 – ரூ. 90,000

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை தொடர்ந்து 90,000 அளவிலேயே ஏறி இறங்கி வருகிறது. அமெரிக்கா – இந்தியா, அமெரிக்கா – சீனா வர்த்தகம் ஒப்பந்தம் ஏற்பட்டால் விலை மேலும் குறையும் என்றும், இல்லை என்றால் விலை மேலும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் விலையை பொறுத்தவரை அடுத்த சில வாரங்களில் அமெரிக்கா எடுக்க போகும் முடிவுகளே விலை உயருமா அல்லது குறையுமா என்ற போக்கை முடிவு செய்யும் என தெரிவிக்கின்றனர். தற்போதைக்கு தங்கம் விலை ஒரு நாள் உயர்ந்தாலும் அடுத்த நாளே குறைந்துவிடுகிறது.

Also Readஇது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!

24 கேரட் தங்கமும் இன்று விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் 76 ரூபாய் விலை உயர்ந்து 12,273 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 608 ரூபாய் விலை உயர்வு கண்டு 98,184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது . ஒரு கிராம் 65 ரூபாய் விலை உயர்ந்து 9,390 ரூபாய்க்கும், ஒரு சவரன் 520 ரூபாய் விலை உயர்ந்து 75 ,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For Youபெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!

வெள்ளி விலை இன்று உயர்ந்து இருக்கிறது. நேற்று 163 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ஒரு ரூபாய் விலை உயர்ந்து 164 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை உயர்ந்து 1, 64,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை வெள்ளியின் விலையும் 166 ரூபாயிலிருந்து 163 ரூபாய்க்குள் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.

Share This Article English summary

how much does one gram of gold cost in Chennai? – Here are the today’s rate

Gold price in Chennai sees minor increase today. Experts predict that the next few weeks are crucial for gold rate direction. Story first published: Thursday, November 6, 2025, 10:06 [IST] Other articles published on Nov 6, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *