முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 10:28 [IST] Share This Article
சென்னையில் தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது மறுநாள் குறைவது என தொடர்ந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் தங்கம் தற்போது வாங்கலாமா வேண்டாமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் விலை உயர்ந்தது. அவ்வளவுதான் இனி தங்கம் விலை தொடர்ந்து உயரப் போகிறது என மக்கள் கலக்கமடைந்த நிலையில் இன்று திடீரென விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 11,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஒரு சவரன் தங்கம் நேற்று 92,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 800 ரூபாய் விலை குறைந்து 92 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை 4 நாட்களில் 3 நாட்கள் விலை குறைந்துள்ளது ஒரு நாள் விலை உயர்ந்துள்ளது.திங்கள்கிழமை ஒரு கிராம் ஆபரணதங்கம் 11,540 ரூபாய்க்கு விற்கப்பட்டது, செவ்வாய்க்கிழமை அன்று 11,400 ரூபாய்க்கும் நேற்று 11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு இன்று 11,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தங்கம் விலை என்ன?
சென்னையில் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 109 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 12,655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 12,546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 872 ரூபாய் விலை குறைந்துள்ளது.நேற்று 1,01,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 1,00, 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 173 ரூபாயாகவும் ஒரு கிலோ 1,73,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read
பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!
உலகளவிலும் இந்திய அளவிலும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை நவம்பரில் ஒரு நாள் ஏறுவது ஒரு நாள் குறைவது என தொடர்ச்சியாக விலை மாற்றம் காண்கிறது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா, இன்னும் விலை குறையுமா அல்லது மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயருமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தங்கத்தை பொறுத்தவரை அமெரிக்கா மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா பொருளாதாரம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை பொறுத்து மாற்றம் அடையும். டிசம்பர் மாதத்தில் விலை குறைந்து ஜனவரி முதல் தங்கம் விலை உயர தொடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Share This Article English summary
Gold price declines in Chennai- Will the price down further?
Gold prices in Chennai is in roller coaster as the price goes ups and downs. Here is what investors should do now? Story first published: Thursday, November 20, 2025, 10:28 [IST] Other articles published on Nov 20, 2025
