மீண்டும் மீண்டுமா!! புதிய பாய்ச்சலுக்கு தயாரான தங்கம், வெள்ளி விலை..!! இன்று ஒரு கிராம் விலை என்ன?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 10:13 [IST] Share This Article
சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 1 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து 12,515 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது . இந்த ஆண்டின் உச்சபட்ச விலை இதுவாகும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் 98,800 ரூபாய் என விலை குறைந்தது.

புதன்கிழமையான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. இன்றைய தினம் மீண்டும் தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் விலை உயர்வு கண்டு 12,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் விலை உயர்ந்து 99,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1,24,400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது.
Also Read
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? உலக தங்க கவுன்சில் தலைவர் பதில்!!
24 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 13,571 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,568 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,35,710 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 10,380 ரூபாய்க்கும், ஒரு சவரன் 83,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 224 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2000 ரூபாய் உயர்ந்து 2.24 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
Recommended For You
தங்கத்தை அடுத்து வெள்ளிக்கும் செக் வைத்த சீனா!! இனி வெள்ளி விலை எகிறப் போகுது!!
உலகளவில் தொழில் ரீதியாக வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. சோலார் பேனல் உற்பத்தி, மின்சார வாகனம் , சிப்கள் என வளர்ந்து வர கூடிய துறைகளில் எல்லாம் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது ஆனால் அதற்கு ஏற்ப சப்ளை இல்லை. எனவே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. சீனா அண்மையில் வெள்ளி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
தங்கத்தை பொறுத்தவரை வட்டி வருமானங்கள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது விலை உயர முக்கிய காரணமாக உள்ளது. வரும் ஆண்டிலும் மத்திய வங்கிகள் வட்டிகளை குறைக்கும் என நம்பப்படுவதால் தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது.
Share This Article English summary
Gold and Silver prices reach new high in Chennai
Silver rate is not showing any sign of cooling as the price is reaching new high every day. Even gold rate is inching towards all time high. Story first published: Thursday, December 18, 2025, 10:13 [IST] Other articles published on Dec 18, 2025
