மீண்டும் கிங் என நிரூபித்த முகேஷ் அம்பானி! 2025ல் குவிந்த 16.5 பில்லியன் டாலர்! – Allmaa

befunky-collage-2025-12-31t091529-215-1767152743

  செய்திகள்

மீண்டும் கிங் என நிரூபித்த முகேஷ் அம்பானி! 2025ல் குவிந்த 16.5 பில்லியன் டாலர்!

News oi-Pugazharasi S By Published: Wednesday, December 31, 2025, 9:15 [IST] Share This Article

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் போட்டி இருக்கும். ஆனால் முதலிடம் என்பது பெரும்பாலும் முகேஷ் அம்பானிக்கு தான். இதை மீண்டும் ஒரு முறை உரக்க உலகிற்கு சொல்லி இருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நாயகன் முகேஷ் அம்பானி.

நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தில் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், அம்பானியின் வளர்ச்சி மட்டும் குன்றிய பாடில்லை. இந்த ஒரு வருடத்தில் மட்டும் அவரின் சொத்து நிகர மதிப்பு சுமார் 1,38,000 கோடி ரூபாய் (16.5 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த கோடீஸ்வரர்களையும் அம்பானியின் பக்கம் ஈர்த்துள்ளது எனலாம்.

மீண்டும் கிங் என நிரூபித்த முகேஷ் அம்பானி! 2025ல் குவிந்த 16.5 பில்லியன் டாலர்!

எப்படி மீண்டும் முதலிடம்?!

முகேஷ் அம்பானியின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னணியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 30% வரையிலான பங்கு விலையேற்றம் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் டெலிகாம் கட்டண உயர்வுகளுக்கு மத்தியில் ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சி, ரீடெயில் துறையில் அசைக்க முடியாத ஆதிக்கம், எண்ணெய் பிரிவில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அதிகளவிலான சுத்திகரிப்பு மார்ஜின் வளர்ச்சி என பலவும் வெற்றிக்கான காரணிகளாக இருந்தன. இதுவே முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வர முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

ஜியோ மீதான நம்பிக்கை!

இந்தியாவில் மிகப்பெரிய சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது தற்போது வரையில் குறைந்தபாடில்லை. நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட டெலிகாம் கட்டண உயர்வானது ஜியோவின் அர்பு (ARPU) வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. மேற்கொண்டு நிறுவனம் வலுவான தனது சந்தை பங்கை தக்க வைத்துக் கொள்ள, இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வெற்றிகரமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இது மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. இது நடப்பு ஆண்டில் மட்டுமல்ல, வரவிருக்கும் ஆண்டுகளிலும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் 2026ம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ பங்குகள் தனியாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. இதுவும் முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் வணிகத்திலும் டாப்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய தொழிலான எண்ணெய் மற்றும் ரசாயனத் துறையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த ஆண்டு வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுவும் ரிலையன்ஸ் பங்கில் முதலீட்டை அதிகரிக்க முக்கிய காரணியாக அமைந்துள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், ரிலையன்ஸின் நவீன சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்திறன், சரியான நேரத்தில் இறக்குமதியில் செய்த முக்கிய மாற்றங்கள் என பலவும் இறக்குமதியிலும் எந்த தடையும் இல்லாமல், எண்ணெய் பெற உதவிகரமாக இருந்தது. இதுவும் வருவாயை பெருக்க உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவாக காணப்பட்டது.

சில்லறை வர்த்தகம்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்லறை வர்த்தக பிரிவைப் பொறுத்த வரையில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக அதன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடைகள் பிரிவில் சிறந்த வளர்ச்சி கண்டுள்ளது.

கிரீன் எனர்ஜி

சோலார் மற்றும் ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ரிலையன்ஸ் செய்துள்ள மெகா முதலீடுகள், வருங்காலத்தின் பெரிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இதுவும் இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் ஒவ்வொரு துறையிலும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகளே, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பை அதிகரிக்க உதவியுள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How did Mukesh Ambani add $16.5 billion to his fortune in 2025?

In 2025, Reliance Industries Chairman Mukesh Ambani emerged as India’s biggest wealth gainer, adding a staggering $16.5 billion to his net worth. Story first published: Wednesday, December 31, 2025, 9:15 [IST] Other articles published on Dec 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *