மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

  செய்திகள்

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்?

News oi-Devika Manivannan By Published: Monday, November 24, 2025, 12:59 [IST] Share This Article

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரக்கூடிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் இந்தியாவை பல்வேறு நாடுகளுடன் நெருக்கம் அடைய வைத்திருக்கிறது. முதலில் பிரிந்திருந்த இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்தன. தற்போது இந்தியா பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவோடு மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோஹென்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் பிரேசில் அதிபர் மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் ஐபிஎஸ்ஏ எனப்படும் இந்தியா பிரேசில் தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு உயிர் பெற்று இருக்கிறது .

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்?

கடந்த 2003ஆம் ஆண்டில் தான் இந்தியா,பிரேசில், தென் ஆப்ரிக்கா கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. வர்த்தக ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்டவற்றை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது தான் இந்த அமைப்பு. கடந்த 2011ஆம் ஆண்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் 2025இல் தான் அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் மோடி மூன்று கண்டங்கள் , மூன்று பெரிய பொருளாதாரங்கள், மூன்று ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு இது வழக்கமான கூட்டமைப்பு அல்ல என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து பேசிய தென் ஆப்பிரிக்கா அதிபர் சிறில் ராமபோசா பன்முகத்தன்மை தான் நம்முடைய பலம் எனக் குறிப்பிட்டார் .

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாட்டு தலைவர்களின் சந்திப்பு டிரம்புக்கு சொல்லப்படும் ஒரு மெசேஜ் என்கிறார் ஐநாவுக்கான முன்னாள் இந்திய தூதரான சையத் அக்ஃபரூதீன். டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நாடுகளுக்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளையே கைவிட்டு விட்டது.

Also Readஇது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

இந்தியாவுடன் வர்த்தக மோதல், தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாட்டினை புறக்கணித்தது. பிரேசில் மீது அதிகபட்ச இறக்குமதி வரி என மூன்று வளர்ந்து வரும் பொருளாதாரங்களையும் டிரம்ப் பகைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் வளர்ந்து வரும் நாடுகள் இனி அமெரிக்காவை சார்ந்திருக்காமல் தங்கள் பிரச்சினைகளை தாங்களே தீர்த்து கொள்ள தொடங்கிவிட்டன என்கிறார் அக்ஃபரூதீன்.

இந்தியா- பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் சந்திப்பு டிரம்ப்புக்கு சொல்லப்படும் ஒரு மெசேஜ் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சந்திப்பிற்கு அமெரிக்கா எப்படி எதிர்வினை ஆற்றும் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது என தெரிவித்திருக்கிறார் அக்ஃபரூதீன் . ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா என சுட்டிக்காட்டுகிறார்.

Recommended For Youஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க்ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க்

இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகியவை பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருந்தாலும் இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் கொள்கையில் பெரும்பாலும சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. இந்த சூழலில் தான் இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான உறவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Share This Article English summary

Trump’s aggressive trade policies revives India-Brazil-South Africa Forum

Due to Trump’s aggressive trade policies, leaders from India, Brazil, and South Africa convened in Johannesburg, reviving the IBSA forum. Story first published: Monday, November 24, 2025, 12:59 [IST] Other articles published on Nov 24, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *