மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா?
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Share This Article
வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.
நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில் அந்த பொருளின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வது கட்டாயம் . அதன் அடிப்படையில் முதலீடு செய்தால் தான் ஓய்வு காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் .

ஓய்வு காலம் என வரும்போது நமக்கு வருமானம் இருக்காது ஆனால் செலவினங்கள் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது . சம்பளமே எனக்கு 25 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது ஆனால் ஓய்வு காலத்தில் எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும் என எண்ணுபவர்கள் எப்படி பிரித்து முதலீடு செய்தால் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதை தற்போது பார்ப்போம் .
இதற்கு தான் 70 :15: 15 என்ற ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது. இது உலக அளவில் பின்பற்றப்படும் மிக எளிமையான ஒரு ஃபார்முலா. அதாவது ஒரு நபர் தன்னுடைய சம்பளத்தில் 70% தொகையை தன்னுடைய அடிப்படை வாழ்க்கை செலவினங்களான வாடகை, மளிகை பொருட்கள் மற்றும் பிற கட்டணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . மீதமுள்ள 15 சதவீதத்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும் , மீதமுள்ள 15 சதவீதத்தை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்து கொள்ள வேண்டும்.
Also Read
மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது?
25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நபர் அதில் 17,500 ரூபாயை தன்னுடைய அடிப்படை செலவினங்களுக்கு ஒதுக்க வேண்டும். 3,750 ரூபாயை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்து கொள்ள வேண்டும், மீதமுள்ள 3,750 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த எஸ்ஐபி தொகையை ஒவ்வொரு ஆண்டும் 10% என உயர்த்த வேண்டும். ஸ்டெப் அப் முறையில் முதலீட்டை உயர்த்த வேண்டும்.
Recommended For You
வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!
அந்த வகையில் பார்க்கும்போது அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தொடர வேண்டும் . உங்களுடைய முதலீடு ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தருகிறது என்றால் 25 ஆண்டுகள் முடியும்போது நீங்கள் செய்த முதலீடு 44 லட்சம் ரூபாய் உங்களுக்கு கையில் கிடைக்கக்கூடிய தொகை 1 கோடி ரூபாய். இந்த பணத்தையும் அப்படியே எடுத்துவிடாமல் தேவையான பணத்தை எடுத்து மீதமுள்ள பணத்தை அப்படியே காம்பவுண்டிங் முறையில் வளர விட்டால் அது தொடர்ந்து உங்களுக்கு செல்வத்தை உயர செய்யும்.
Share This Article English summary
How to invest my rs 25,000 salary to get Rs 1 crore for retirement?
One of the best investment strategy in the world is 70:15:15 formula, which ensures financial stability and future planning without compromising on one’s current lifestyle. Story first published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Other articles published on Nov 13, 2025