மாசம் ரூ.12500 போதும்.. லட்டு மாதிரி ரூ.40 லட்சம் கிடைக்கும்.. 100% பாதுகாப்பான திட்டம்..!!
Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 18:22 [IST] Share This Article
ஒருவர் பணக்காரர் ஆக பங்குச் சந்தை முதலீடு அல்லது ரிஸ்கியான கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகளால் தான் முடியும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. ரிஸ்க் எடுக்கத் துணிவில்லையா, உங்கள் முதலீட்டுக்கு அரசின் உத்தரவாதம் வேண்டுமா, அப்படியானால் இந்தியாவின் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக அஞ்சலத்தில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
பிபிஎஃப் திட்டத்தின் மூலம் நீங்கள் செய்யும் சிறிய அளவிலான முதலீடுகள் கூட, எதிர்காலத்தில் கூட்டுவட்டியின் பலனாக பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். இந்த திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளில் எப்படி 40 லட்சம் கார்ப்பஸை உருவாக்குவது என்பதை பார்த்தால் உண்மை உங்களுக்கே புரிய வரும். கூட்டுவட்டியின் மாயாஜாலத்தை இதில் புரிந்து கொள்வீர்கள்.

ஒருவர் கோடீஸ்வரர் ஆவது என்பது கடினமான ஒன்றல்ல. அதற்கு தேவையான முதலீட்டு பழக்கமும், கூட்டு வட்டியின் சக்தியும் இணைந்தால் அது எளிதில் சாத்தியமாகும். அந்த வகையில் இந்த பதிவில் 40 லட்சம் நிதி இலக்கை நோக்கிய பயணத்தை பற்றி பார்க்கலாம்.
எவ்வளவு முதலீடு?
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு எப்போதும் அஞ்சலகத்தின் பிபிஎஃப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். இதில் மாதம் 12,500 ரூபாய் வீதம், வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் 40 லட்சம் ரூபாய் இலக்கை எளிதாக எட்ட முடியும். தற்போதைய சூழலில் இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.1% ஆகும். இதை 15 ஆண்டுகளுக்கு தொடரும்போது உங்கள் முதலீட்டின் மீதான வட்டி வருமான மதிப்பு 18.18 லட்சம் ரூபாயாகும். ஆக மொத்தம் வருமானத்துடன் சேர்த்த கார்ப்பஸ் மதிப்பு சுமார் 40.68 லட்சம் ரூபாயாகும்.
வரிச் சலுகையும் உண்டு?
பிபிஎஃப் திட்டத்தில் உள்ள மிகப்பெரிய சலுகையே EEE வரிச் சலுகை ஆகும். அதாவது செய்யும் முதலீடு, முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானம், முதிர்வு தொகை என அனைத்திற்கும் வரிச்சலுகை கிடைக்கும். மேலும் இந்த திட்டமானது அரசின் ஆதரவுடன் உள்ள அஞ்சலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் கூட்டு வட்டியின் பலனும் கிடைப்பதால், குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற இலக்குகளுக்கு ஏற்ற திட்டமாகவும் உள்ளது.
அனைத்தரப்பினரும் முதலீடு செய்யலாம்!
பிபிஎஃப் திட்டத்தை பொறுத்த வரையில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்து கொள்ளலாம். இது அனைத்து தரப்பு மக்களும் அணுகக் கூடியதாகும். மேலும் 15 திட்டம் என்றாலும், இன்னும் நீட்டித்துக் கொள்ள விருப்பமுடையவர்கள் 5 ஆண்டு தொகுப்பாக தொடர்ந்து நீட்டித்துக் கொள்ளலாம். இதில் பங்குச் சந்தை அபாயம் இல்லாததால், அசலுக்கு எந்த பாதகமும் வராது. மேலும் வட்டி விகிதமும் காலாண்டுக்கு ஒரு முறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திருத்தப்படும் என்றாலும், வங்கி பிக்சட் டெபாசிட்டுகளை விட இது பயனுள்ளதாக இருக்கும்.
Share This Article English summary
How much should be invested in the Post Office PPF scheme for 15 years to receive a corpus of Rs. 40 lakhs?
investors can easily achieve the target of Rs 40 lakh by investing Rs 12,500 per month, totaling Rs 1.5 lakh per year, in the Post Office PPF scheme. Story first published: Tuesday, December 16, 2025, 18:22 [IST] Other articles published on Dec 16, 2025
