மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 17:33 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

முதல் கட்டமாக ஒரு கோடி 13 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பம் செய்யலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 10,000 உங்களுடைய ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கான பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்து மிக கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு 17 லட்சம் பேர் புதிய பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் வழங்கும் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
Also Read
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த சூழலில் தற்போது விண்ணப்பம் செய்தவர்களில் பலரும் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற சோகத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அதற்கான காரணங்களோடு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலினே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் பி பழனியப்பனின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவர் பேசினார்.
Recommended For You
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?
ஏற்கனவே ஒரு கோடியே 13 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை வாங்கி வந்தனர், தற்போது கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை நான் தொடங்கி வைத்திருக்கிறேன் என தெரிவித்தார். இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை வாங்குகிறார்கள் இன்னும் கூட தகுதி உள்ள பெண்கள் விடுபட்டிருந்தால் உடனடியாக கோரிக்கை வைத்தால் நிச்சயமாக ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் என்ற உறுதியை அவர் அளித்தார்.
எனவே விடுபட்ட பெண்கள் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தகுதிகள் இருந்தால் நிச்சயமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என முதலமைச்சரே கூறியிருக்கிறார் . இது தவிர மகளிர் உரிமை தொகை மேலும் உயரும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார் .
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திமுக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்திய வழங்குவது தொடர்பான அறிவிப்பை வழங்கலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக 1000 ரூபாயை 1500 இல் இருந்து 2000 ரூபாய் வரை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share This Article English summary
Magalir Urimai thokai: CM Stalin says , women can still appeal to the authorities
Tamilnadu CM Stalin says that those who have missed Magalir urimai thokai will get a chance to appeal. Here is everything he said. Story first published: Sunday, December 14, 2025, 17:33 [IST] Other articles published on Dec 14, 2025
