மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 17:18 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை ரேஷன் கார்டு அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது . 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்த டிசம்பர் 12ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெறுகிறார்கள். டிசம்பர் 12இல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான பெண்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது . முதலமைச்சரே மகளிர் உரிமைத்தொகை உயரும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டார் . அப்படி என்றால் எப்போது முதல் மகளிர் உரிமைத்தொகை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என பெண்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் .
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது . கடந்த தேர்தலிலேயே திமுக தன்னுடைய வாக்குறுதியில் முக்கியமாக கூறிய விஷயம் தான் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்டம். திமுகவுக்கு அதிக மகளிர் வாக்குகளை பெற்று தந்ததும் இந்த வாக்குறுதி தான். அனைவருக்கும் 1000 ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது , ஆனால் அரசு குடும்ப வருமான அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறது.

எதிர் வரக்கூடிய வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் மிகப்பெரிய ஒரு பங்காற்றும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் இந்த முறை தங்களின் தேர்தல் வாக்குறுதியில் நிச்சயம் மகளிர் தொகையை தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும்.
Also Read
தங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!
தற்போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிடுமா? அல்லது தேர்தலுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது . ஆனால் தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு குறைவு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அரசு இப்போதுதான் கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளை சேர்த்திருக்கிறது. இது அரசுக்கு கூடுதல் நிதி சுமையை உண்டாக்கியிருக்கிறது.
Recommended For You
பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது? ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகமா? பரபரக்கும் தலைமை செயலகம்!
பொங்கல் பரிசு தொகை கொடுக்க வேண்டும் என்று அழுத்தமும் இருக்கிறது என்பதால் அரசு உடனடியாக மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது 1000 ரூபாயாக இருக்கும் உரிமை தொகையை 1500 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக இதனை தேர்தல் வாக்குறுதியாக வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது, அப்படி இருந்தால் அதற்கு போட்டியாக அதிகபட்ச தொகையை அதிமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறச் செய்யலாம். எனவே இந்த தேர்தலில் மகளிர் உரிமை தொகை திட்டம் முக்கிய இடம் பிடிக்க போகிறது.
Share This Article English summary
Magalir urimai thokai: How much the amount will be increased?
Tamilnadu CM Stalin announced that very soon Magalir urimai thokai will be increased, this has created more expectation among the public, Here is how much the Magalir urimai thokai may be increased. Story first published: Monday, December 22, 2025, 17:18 [IST] Other articles published on Dec 22, 2025
