மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 12:29 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் தான் இந்த திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை சேர்த்து வைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 30 லட்சம் மகளிர் மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்று அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மகளிர் உரிமைத்தொகை என்பது வரவு வைக்கப்பட்டு விடும்.

வரும் 15ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது அதாவது 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை என்பது பொங்கல் பண்டிகை ஒட்டி முன்கூட்டியே பெண்களின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டது .
அதே வழக்கம் இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை என்பது 11ஆம் தேதியே பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வந்ததால் ஏராளமான பெண்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Also Read
ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!
இந்த சூழலில் தான் இந்த ஆண்டும் அதே முறையே பின்பற்றி ஜனவரி 9ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அல்லது 12ஆம் தேதியான திங்கள்கிழமையே அனைத்து பயனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுவிடும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஒருபுறம் 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
Recommended For You
மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா?
அப்படி பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டால் மகளிர் தொகை வாங்கக்கூடிய குடும்பங்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் என மொத்தம் 4000 ரூபாய் கிடைக்கும். பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவதாக இருந்தால் ஜனவரி 9ஆம் தேதியில் இருந்தே வழங்கப்படும் என்பதால் ஜனவரி 9ஆம் தேதி 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு முக்கிய தினமாக மாற இருக்கிறது.
Share This Article English summary
Tamilnadu government may distribute 1000rs Magalir urimai thokai before pongal
AS Pongal falls on January 15th, Tamilnadu government may distribute 1000rs Magalir urimai thokai in advance just like last year. Story first published: Sunday, December 28, 2025, 12:29 [IST] Other articles published on Dec 28, 2025
