பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

chinagold2-1763548082

  செய்திகள்

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, November 19, 2025, 16:00 [IST] Share This Article

சீனா: உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கியது தான். 2025 ஆம் ஆண்டு இந்த போக்கை தொடங்கி வைத்தது சீனா.

சீன நாட்டின் மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டில் பல மடங்கு தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருக்கிறது . சீனா அரசாங்கமும் நாட்டு மக்கள் இயன்றளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என தொடர்ச்சியாக அறிவுரை கூறி வருகிறது . சீன நாட்டு அரசாங்கம் வெளியிடும் தகவலின் படி 2024 ஆம் ஆண்டில் சீன நாட்டு மத்திய வங்கி 44 டன்கள் தங்கம் வாங்கி இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தான்.

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

உண்மையில் சீனா 2024ஆம் ஆண்டில் இதை விட பலமடங்கு தங்கம் வாங்கியுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி 2024ஆம் ஆண்டில் சீனா 250 டன்கள் தங்கம் வாங்கி இருக்கிறது. சீனா எவ்வளவு தங்கம் வாங்குகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என கூறும் நிபுணர்கள் தங்கம் விவகாரத்தில் நிச்சயம் பொய் கூறுகிறது என்கின்றனர்.

2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 400 அவுன்ஸ் பார் தங்கம் பெரும்பகுதி சீனாவிற்கு தான் சென்றுள்ளதாம். சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கும் பின்னர் அங்கிருந்து சீனாவுக்கும் இந்த தங்கம் சென்று இருக்கிறது என கூறுகின்றனர் .

Also Readதங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கரன்சியாக அமெரிக்க டாலர் இருக்கக்கூடிய சூழலில் சீனாவை பொறுத்தவரை அதனை மதிப்பிழக்க செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. டாலருக்கு மாற்றாக ஒரு வலுவான பொருள் என்றால் அது தங்கம் தான். தங்களின் வசம் தங்கம் இருப்பு அதிகரிக்க அதிகரிக்க தங்கள் நாட்டு நாணயமான யுவான் வலுப்பெறும் என்பது சீனாவின் எண்ணம். சீனா தான் மட்டுமல்ல சிறு சிறு நாடுகளை கூட டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கி வைக்க அறிவுறுத்துகிறது.

பிளீனியம் ரிசர்ச் என்ற அமைப்பு சீனாவின் தங்கம் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ,சில்லறை விற்பனை உள்ளிட்டவற்றை பார்க்கும் போது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் 1300 டன்கள் தங்கம் அந்த நாட்டிற்கு சென்றிருப்பதாக கூறுகிறது. உலக தங்க உற்பத்தியில் 10% சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

Recommended For You45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

தங்கம் வாங்குவதை உலக நாடுகள் வெளிப்படையாக தெரிவிப்பதும் கடந்த 4 ஆண்டுகளாக குறைந்துள்ளது என்கிறது உலக தங்க கவுன்சில். அமெரிக்க நடவடிக்கைக்கு பயந்து நாடுகள் தங்கம் வாங்குவதை வெளிப்படையாக தெரிவிக்காமல் தவிர்க்கின்றனவாம். இப்படி உலக நாடுகள் தங்கம் வாங்குவது அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தின் டிமாண்ட் அதிகமாகி விலையும் கட்டாயம் உயரும்.

Share This Article English summary

Experts says that China is secretly piling up more gold than it reports

China’s actual gold purchases in 2024 may be far larger than officially reported, with estimates suggesting unreported buying could be up to ten times higher than public data indicates. Story first published: Wednesday, November 19, 2025, 16:00 [IST] Other articles published on Nov 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *