பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பு!! இத தவறவிட்டா பணம் கிடைக்காது!! – Allmaa

pongal26-1768647409

  செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பு!! இத தவறவிட்டா பணம் கிடைக்காது!!

News oi-Devika Manivannan By Published: Saturday, January 17, 2026, 16:28 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3000 ரூபாய் பரிசு மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகள் வாயிலாகவும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய 34,000 ரேஷன் கடைகள் வாயிலாக 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசுத் தொகை 3000 ரூபாயும் வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பு!! இத தவறவிட்டா பணம் கிடைக்காது!!

ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டதால் ரேஷன் அட்டைதாரர்கள் அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் வந்து சுமூகமாக பொங்கல் பரிசு தொகையையும் பொருட்களையும் வாங்கி சென்றார்கள். டோக்கன் பெறாதவர்கள் மற்றும் வெளியூரில் தங்கி இருந்த அனைவருக்கும் 14ஆம் தேதி பொங்கல் பரிசு பெறுவதற்கு ஒரு இறுதி வாய்ப்பு என்பது வழங்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் 15 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளுக்கு பொங்கல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பரிசு வாங்காத நபர்கள் , 15ஆம் தேதி தான் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் எல்லாம் தங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கவில்லை, இவ்வாறு தவறவிட்டவர்கள் என்ன செய்வது தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கமா என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Also Readசென்னை மக்களே காணும் பொங்கலுக்கு மெரினாவை விடுங்க!! இந்த வருஷம் இங்க போங்க செம ஜாலியா இருக்கும்!!சென்னை மக்களே காணும் பொங்கலுக்கு மெரினாவை விடுங்க!! இந்த வருஷம் இங்க போங்க செம ஜாலியா இருக்கும்!!

இந்த சூழலில் தான் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் வரக்கூடிய 19ஆம் தேதி ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயையும் வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பொங்கல் பரிசு தொகையை வாங்காதவர்கள் 19ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகையினை வாங்கிக் கொள்ளலாம். இதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாது என்றே சொல்லப்படுகிறது.

Recommended For Youமகளிருக்கு மாதம் ரூ.2,000, ஸ்கூட்டி வாங்க மானியம், ஆண்களுக்கும் இலவச பேருந்து - அதிமுக வாக்குறுதி!!மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஸ்கூட்டி வாங்க மானியம், ஆண்களுக்கும் இலவச பேருந்து – அதிமுக வாக்குறுதி!!

அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசு தொகையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வரும் 19ஆம் தேதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையும் தொகுப்பையும் வழங்குவதற்கு அனுமதி தந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னதாக பொங்கல் பரிசு டோக்கன் மற்றும் பொங்கல் பரிசு விநியோகம் பணிகள் காரணமாக ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அதாவது வழக்கமாக வழங்கக்கூடிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை.வரும் வாரத்திலேயே அந்த பொருட்கள் வழங்கப்பட்டு விடுமா அல்லது ஜனவரியில் விடுபட்ட பொருட்கள் பிப்ரவரியில் சேர்த்து வழங்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share This Article English summary

Pongal prize will be distributed in all ration shops on Jan 19

Tamilnadu government has announced that those yet to receive the pongal prize can get their Pongal cash gift on January 19 and sources says this is the last chance to grab the Pongal gift. Story first published: Saturday, January 17, 2026, 16:28 [IST] Other articles published on Jan 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *