பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!! – Allmaa

ration7-1767697143

  செய்திகள்

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, January 6, 2026, 16:30 [IST] Share This Article

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை. மாறாக அரிசி ,சர்க்கரை , கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயமாக ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!

ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தைத்திருநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் அதோடு ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 8ஆம் தேதியிலிருந்து பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் . சென்னையில் நடைபெறும் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். பச்சரிசி சர்க்கரை ஆகியவை ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்ற வருகின்றன.

Also Readதங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?

வரும் 8ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடை இயங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைத்திருக்கிறது.

இதன்படி 1500 மற்றும் அதற்கு மேல் மற்றும் 2000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டு இருக்கும் ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் நாளில் ரேஷன் கடைக்கு அதிக அளவிலான மக்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் முற்பகலில் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் என்றும் இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு 300 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசு தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For Youதிடீர்னு Layoff பண்ணிட்டாங்களா? கடன் கழுத்தை நெறிக்குதா?- இத ஃபாலோ பண்ணீங்கனா டென்ஷனே வேண்டாம்!!திடீர்னு Layoff பண்ணிட்டாங்களா? கடன் கழுத்தை நெறிக்குதா?- இத ஃபாலோ பண்ணீங்கனா டென்ஷனே வேண்டாம்!!

குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரவேண்டும் என்பதை தெளிவாக டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும் .தொழில்நுட்ப காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு வேலை செய்யவில்லை என்றால் பதிவேட்டில் கையெழுத்து பெற்று வழங்க வேண்டும்.

பொங்கல் ரொக்கப் பணம் 3 ஆயிரம் ரூபாயை வழங்கும் போது ரூபாய் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக வழங்க கூடாது பயனாளிகள் முன்பே நோட்டுகளை எண்ணி அவர்களின் கைகளிலேயே வழங்க வேண்டும் .உரிய அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தொகையும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article English summary

how to distribute the Pongal Cash Rs 3000 ? New circular by stalin govt

Tamilnadu government has sent a circular to all the district collectors about how to distribute the Pongal Cash Rs 3000 to Rice ration card holders. Story first published: Tuesday, January 6, 2026, 16:30 [IST] Other articles published on Jan 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *