பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!

pongal15-1767581745

  செய்திகள்

பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!

News oi-Devika Manivannan By Published: Monday, January 5, 2026, 8:28 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குகிறது . முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2022 ஆம் ஆண்டு, 2023 ஆம் ஆண்டு, 2024 ஆம் ஆண்டு என தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலமைச்ச ஸ்டாலின் தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கியது. இத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது . ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது . ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை . இது பொதுமக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!

இந்த நிலையில் தான் இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு அதிரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்க பணமும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் ஒரு கிலோ பச்சரிசி ,சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவையும் 3000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என தெரிவித்து தமிழக மக்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் முறையாக பயனாளிகளை சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்குவார்கள். அந்த டோக்கனில் குறிப்பிட்ட அந்த குடும்ப அட்டைதாரருக்கு எந்த தேதியில் எந்த நேரத்தில் ரேஷன் பொருட்கள் மற்றும் 3,000 ரூபாய் பணம் கிடைக்கும் என்ற விவரம் இடம் பெற்றிருக்கும்.

Also Readபொங்கல் பரிசு ரூ.3000 + மகளிர் உரிமை தொகை ரூ.1000.. அவசரபட்டு செலவு செய்திடாதீங்க..!! பொங்கல் பரிசு ரூ.3000 + மகளிர் உரிமை தொகை ரூ.1000.. அவசரபட்டு செலவு செய்திடாதீங்க..!!

குறிப்பிட்ட அந்த நேரத்தில் இவர்கள் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகை கிடைக்கும். தமிழ்நாடு அரசு தன்னுடைய அறிவிப்பிலேயே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த ரொக்க பணமும் பொங்கல் பரிசு தொகுப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH), முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா (PHH-AAY), முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை ( NPHH ) , சர்க்கரை அட்டை ( NPHH-S ) ,பொருட்கள் இல்லா அட்டைகள் (NPHH-NC) வழங்கப்படுகின்றன.

இதில் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH), முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா (PHH-AAY), முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை ( NPHH ) ஆகிய மூன்று வகையான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பும் 3000 ரூபாய் பணமும் கிடைக்கும்.

Recommended For Youசென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. பொங்கல் பரிசு டோக்கன் விநியோகத்தில் முக்கிய அப்டேட்..!!சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. பொங்கல் பரிசு டோக்கன் விநியோகத்தில் முக்கிய அப்டேட்..!!

சர்க்கரை அட்டை ( NPHH-S ) ,பொருட்கள் இல்லா அட்டைகள் (NPHH-NC) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது. உங்களின் ரேஷன் அட்டையிலேயே அது என்ன வகையான ரேஷன் அட்டை என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ரேஷன் கார்டை பயன்படுத்தி அரிசி வாங்க கூடிய குடும்பங்களுக்கு தான் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும்.

புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது வாங்கி வைத்தால் அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்.

Share This Article English summary

Pongal prize Rs.3000: People with these type of ration cards will not get it?

Tamilnadu government headed by Stalin has announced Pongal gift along with Rs.3000. But not everyone who has a ration card will get the prize. Yes check here whether you are eligible or not? Story first published: Monday, January 5, 2026, 8:28 [IST] Other articles published on Jan 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *