பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

pongal24-1768129106

  செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

News oi-Devika Manivannan By Published: Sunday, January 11, 2026, 16:30 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு நீள கரும்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றோடு கூடிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் உற்சாகமாக இந்த பொங்கல் பரிசு தொகையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் வாங்கி சென்று வருகின்றனர்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விட்டது. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கடைக்கு வந்து தங்களுக்குரிய பொங்கல் பரிசு தொகையும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி செல்கின்றனர். இந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கவர்களில் வைத்து கொடுக்கக் கூடாது , பயனாளி முன்னிலையில் எண்ணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

பொங்கல் பரிசுத்தொகை பெற கடைசி தேதி எது? தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 8ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் டோக்கன் இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இனி கிடைக்காதா, வெளியூரில் தங்கி இருப்பவர்கள் குறிப்பிட்ட அந்த தேதிக்குள் சென்று பொங்கல் பரிசு வாங்க முடியவில்லை என்றால் இந்த பணம் கைக்கு வராமலேயே போய்விடுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் வெளியூரில் வசித்து இருக்கக்கூடிய நபர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு இனிமேல் தான் பயணம் செய்வார்கள். ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப உறுப்பினர் தான் கைரேகை வைத்து பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியும் என்பதால் இவர்கள் சொந்த ஊருக்கு சென்றால்தான் அந்த பொங்கல் பரிசு தொகையையும் தொகுப்பையும் வாங்க முடியும். அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கும்போதுதான் பலரும் கிளம்பவே முடியும். அப்படி பார்க்கும்போது பலரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தான் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

Also Readபொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

எனவே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு கடைசி தேதி என எதையாவது அறிவித்திருக்கிறதா, இவ்வாறு தவறவிட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த நிலையில் டோக்கன் பெறாதவர்கள், வெளியூரில் தங்கி இருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை கிடைப்பது உறுதி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறதாம்.

எனவே இதற்காக ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது எனவே அன்றைய நாள் காலையில் சொந்த ஊருக்கு வருகை தருபவர்கள் எப்படி பொங்கல் பரிசு தொகை பெறுவது என்ற குழப்பம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பொருத்தவரை இதுவரை பொங்கல் பரிசு தொகை பெற இதுதான் கடைசி நாள் என அறிவிக்கவில்லை.

Recommended For Youபொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14, 15 ,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது . பொங்கல் பண்டிகை நாளன்று மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 18ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்பட்டது. தவறவிட்டவர்கள் 18ஆம் தேதி வரை பொங்கல் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதேபோல 18ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு பெற வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article English summary

Is there a last date to receive Pongal Cash Prize in Tamilnadu?

Has the Tamilnadu government announced the last date to receive Pongal Cash Prize? Many people living out of the station due to work are worried about missing the Pongal Cash Prize. Story first published: Sunday, January 11, 2026, 16:30 [IST] Other articles published on Jan 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *