பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 24, 2025, 11:19 [IST] Share This Article
பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 2 கரும்பு உட்பட 1000 ரூபாய் ரொக்க பணமாக வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரிசி ,சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை. அரிசி , சர்க்கரை , கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பொங்கல் பண்டிகையின் போது அரசு பொங்கல் பரிசு தொகை வழங்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் பணத்தை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக தலைமை செயலகத்திலும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொங்கல் பரிசு தொகை குறித்து பேசி இருக்கிறார்.
Also Read
உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொங்கல் பரிசு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார், இது குறித்த முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்திருக்கிறார்.
Recommended For You
மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா?
இதற்கிடையே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகமும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share This Article English summary
Ration card holders to get Rs 5000 Pongal prize money? – Anbil Mahesh answers
Tamilnadu School education minister Anbil Mahesh says that Chief Minister Stalin will make a good decision regarding the Pongal Prize amount. Story first published: Wednesday, December 24, 2025, 11:19 [IST] Other articles published on Dec 24, 2025
