பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!!

chennai7-1766912015

  செய்திகள்

பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!!

News oi-Devika Manivannan By Published: Sunday, December 28, 2025, 14:25 [IST] Share This Article

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் சந்தை பெரிய அளவிலான மாற்றம் கண்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர் ,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் சராசரியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மதிப்பு என்பது அதிகரித்திருந்தது . ஆனால் வீடுகளின் விற்பனை அதற்கு நிகராக உயர வில்லை. 2024 ஆம் ஆண்டிலும் 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனையில் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்த ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அனராக் நிறுவனம்.

பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!!

இதன்படி ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பெரிய நகரங்களில் எல்லாம் வீடுகளின் விற்பனை 14 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதாவது 2024 ஆம் ஆண்டில் சென்னை ,பெங்களூர் ,ஹைதராபாத், புனே, கொல்கத்தா ,மும்பை ,டெல்லி என்.சி.ஆர். ஆகிய பகுதிகளில் 4,59,645 வீடுகள் விற்பனை செய்யப்பட்டன. இது 2025 ஆம் ஆண்டில் 3, 95,625 என 14 சதவீதம் குறைந்து இருக்கிறது.

அதிகபட்சமாக நாட்டிலேயே ஹைதராபாத்தில் வீடுகளின் விற்பனை சுமார் 23 சதவீதம் குறைந்திருக்கிறது. அடுத்ததாக புனேவில் 20 சதவீதமும் மும்பையில் 18 சதவீதமும் குறைந்திருக்கிறது. இந்தியாவிலேயே வீடுகளின் விற்பனை அதிகரித்து இருக்கக்கூடிய ஒரே நகரமாக சென்னை திகழ்கிறது. இந்தியாவில் பெங்களூரு ,புனே ,ஹைதராபாத், மும்பை ,டெல்லி , கொல்கத்தா நகரங்களில் வீடுகளின் விற்பனை சரிந்திருக்கும் நிலையில் சென்னையில் மட்டும்தான் வீடுகளில் விற்பனை 15 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது.

Also Readஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!

2024 ஆம் ஆண்டில் 19,220 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டில் அது 22,180 வீடுகள் என உயர்வு கண்டிருக்கிறது. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வீடுகள் விற்பனை சரிவடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த நகரங்களில் மிக வேகமாக ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. ஆனால் அதற்கு ஏற்ப மக்கள் வருமானம் உயரவில்லை.

Recommended For Youமகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!!மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!!

ஐடி துறை மந்தம், ஊழியர்கள் பணிநீக்கம், ஊதிய உயர்வு குறைந்தது ஆகிய அனைத்தும் இந்த நகரங்களில் வீடுகள் விற்பனை சரிவடைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதே வேளையில் சென்னை நாட்டிலேயே வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு ரியல் எஸ்டேட் சந்தையாக தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது .

Share This Article English summary

Chennai Leads in Housing Sales Growth despite National Slowdown

Chennai’s residential real estate market demonstrates robust growth, with significant surges in sales and registrations bucking national declines Story first published: Sunday, December 28, 2025, 14:25 [IST] Other articles published on Dec 28, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *