புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!! – Allmaa

modif17-1764906883

  செய்திகள்

புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!!

News oi-Devika Manivannan By Published: Friday, December 5, 2025, 9:26 [IST] Share This Article

டெல்லி: இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று மாலை இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை புரோட்டோகாலை பிரேக் செய்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று வரவேற்றார்.

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தந்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த பயணம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் உற்று நோக்கும் ஒரு பயணமாக உள்ளது. குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் 50% வரியை விதித்துள்ளது.

புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!!

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் நிலவும் சூழலில் புதினின் பயணம் அமைந்துள்ளது. வழக்கமாக ஒரு வெளிநாட்டு தலைவர் வருகை தருகிறார் என்றால் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க மாட்டார். அது புரோட்டோக்கால் கிடையாது. ஆனால் புதினுக்கு அந்த புரோட்டோக்காலை பிரேக் செய்துள்ளார் பிரதமர் மோடி.

மாலை புதினின் விமானம் தரையிறங்கும் போதே மோடி விமான நிலையத்திற்கு சென்று விட்டார். புதினை ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்றார். இந்தியாவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு , மோடிக்கும் புதினுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் நரேந்திர மோடியின் இந்த செயல்பாடு அமைந்திருக்கிறது .

Also Read20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!

2021ஆம் ஆண்டிக்கு பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார் புதின். பிரதமர் மோடி புதினை வரவேற்றதோடு அதிகாரிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . புதினுடன் அமைச்சர்களும் பல்வேறு தொழில்துறை தலைவர்களும் வருகை தந்திருக்கின்றனர்.

புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!!

விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி , ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் பயணம் செய்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடி புதினுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தார். இதற்காக லோக் கல்யாண் மார்க் குடியிருப்பே பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

Recommended For Youரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எங்கு சென்றாலும் அவருடன் பயணிக்கும் ரகசிய பெட்டி!!ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எங்கு சென்றாலும் அவருடன் பயணிக்கும் ரகசிய பெட்டி!!

விருந்து முடிந்த உடன் மோடி , புதினுக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார். ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை புதினுக்கு பரிசளித்த மோடி கீதையின் போதனை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என கூறியுள்ளார். இந்த படங்களை மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

Share This Article English summary

Modi gives special gift to Russia President Putin & breaks many protocol

Prime Minister Modi breaks Protocol to invite Putin at airport and host him special dinner. He also gifted him Gita Book. Story first published: Friday, December 5, 2025, 9:26 [IST] Other articles published on Dec 5, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *