பிப்ரவரி 12:நாடு தழுவிய பாரத் பந்த்! வங்கிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்குமா?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 11, 2026, 17:11 [IST] Share This Article
செய்ய இருக்கிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்துள்ள இந்த பாரத் பந்த், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்குமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் முடங்குமா? பேருந்துகள் மற்றும் ரயில்கள் வழக்கம் போல் இயங்குமா? அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் திறந்திருக்குமா? என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ள 12 முக்கிய கோரிக்கைகள் எவை? எதற்கெல்லாம் விடுமுறை, எதெல்லாம் இயங்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
நாடு தழுவிய போராட்டம்?
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து பிப்ரவரி 12 (புதன்கிழமை) அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டத்தில் INTUC, AITUC, HMS, CITU, LPF (தமிழகத்தின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்) உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் அகில இந்திய கிசான் சபா போன்ற விவசாய அமைப்புகளும் களமிறங்க உள்ளது.
போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள்:
தொழிலாளர் நலன் முக்கியம்: மத்திய அரசு 29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு கொண்டுவரப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களின் முதல் கோரிக்கை. இது வேலை பாதுகாப்பை குறைக்கும் என அஞ்சுகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு: அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA): 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, அதன் கீழ் வேலை உத்தரவாதத்தை அதிகரிக்க வேண்டும். புதிய விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதிய மசோதாக்கள் நீக்கம்: மின்சாரத் திருத்த சட்டம் (Electricity Amendment Bill) மற்றும் சாந்தி’ (SHANTI) சட்டம் போன்ற புதிய மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்.
வேலைவாய்ப்பு உறுதி: விக்சித் பாரத் – கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தனியார்மயமாக்கல்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யப்பட உள்ளது.
எது இயங்கும்? எது இயங்காது?
இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் இந்த பந்த்திற்கு முழு அடைப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கி சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இருப்பினும் வங்கிகள் அதிகாரப்பூர்வ விடுமுறை எதுவும் அறிவிக்கவில்லை. இருப்பினும் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை..
Share This Article English summary
Will your local bank branches remain open or closed tomorrow amid the nationwide bharat bandh?
Banks aren’t officially closed, but unions joining the February 12 strike may disrupt physical branch services. Digital banking remains fully operational. Story first published: Wednesday, February 11, 2026, 17:11 [IST] See More On: bharat bandh, பாரத் பந்த் Other articles published on Feb 11, 2026
