பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இப்போ மதிப்பே இல்லையா? டெக் நிறுவனத்தின் தேவை இந்த பிரிவு தான்..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 13:52 [IST] Share This Article
இன்றைக்கு எல்லாமே கம்ப்யூட்டர் மற்றும் ஏஐ மயமாகிவிட்டது. இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. படித்து முடித்த உடனே வேலை வேண்டும் என்றால் CSE எனப்படும் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது பரவலாக மாணவர்கள் மத்தியில் இருக்கும் எண்ணம். ஆனால் இப்போது நிலைமையே வேறு.
பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு தற்போது மதிப்பே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு மாற்றாக வேறொரு பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன . பாரம்பரியமாக டெக் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப்படும் CSE படிப்பை முடித்து இருந்தாலே அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்தன. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி வருகிறது.

டெக் நிறுவனங்களுக்கு தற்போது கோடிங் செய்ய தெரிந்த இன்ஜினியர்கள் மட்டுமே தேவை கிடையாது . ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆகிய மூன்று குறித்த புரிதல்களையும் கொண்ட திறன்மிகு நபர்களை தான் பெரிய பெரிய நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன. அந்த வகையில் டெக் நிறுவனங்கள் தற்போது electronics and communication engineering எனப்படும் ECE பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன.

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி, ஐஓடி, ஏஐ, ரோபோடிக்ஸ், செமி கண்டக்டர் ஆகிய துறைகள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன . இந்த துறைகளின் வளர்ச்சிக்கு சாஃப்ட்வேர் மட்டுமே காரணம் கிடையாது. சிப் டிசைன் , சர்க்யூட் , நெட்வொர்க் சிஸ்டம் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆகியவற்றின் புரிதலும் அவசியமாகிறது .
Also Read
வேலை தேடுறவங்களுக்கு செம சான்ஸ்!! அமேசான் இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்!!
ஜாம்செட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் வெளியிடும் தரவுகளின் படி பார்க்கும்போது 2024-25 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நிகராக 82 பிடெக் ECE முடித்தவர்களுக்கும் 82 லட்சம் ரூபாய்சம்பளத்தில் வேலை கிடைத்ததாக தெரிவித்துள்ளது. இந்த பிரிவில் படித்தவர்களுக்கு 100% பிளேஸ்மெண்ட் கிடைத்திருக்கிறது என்றும் இண்டர்ன்ஷிப் பெற்ற மாணவர்களில் கம்யூட்டர் சயின்ஸை விட ECE மாணவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்கிறது.
Recommended For You
அமெரிக்காவுல குடியேறணுமா? H1B விசாவ விடுங்க வந்துவிட்டது கோல்டு கார்டு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
எனவே டெக் நிறுவனங்களுக்கு தற்போது வெறும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் மட்டும் தேவையில்லை ஹார்ட்வேர் குறித்த புரிதலும் கொண்டவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும் நல்ல வேலை இருக்கிறது, ஆனால் தற்போது நிறுவனங்களின் முன்னுரிமை படிப்படியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மாற்றாக ECE முடித்தவர்களுக்கு என மாறி வருகிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சிறந்த வேலை வாய்ப்பை தரக்கூடிய படிப்பாக ECE இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Share This Article English summary
CSE Losing Steam: Tech Giants Eye This Hot Branch Instead
Declining interest in traditional B.Tech Computer Science programs signals a hiring pivot, with tech companies favoring ECE graduates. Story first published: Thursday, December 11, 2025, 13:52 [IST] Other articles published on Dec 11, 2025
