பாஜக கஜானாவில் குவியும் கோடிகள்! மலைக்க வைக்கும் ரூ.10,000 கோடி சொத்து மதிப்பு!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 9:37 [IST] Share This Article
ஜனநாயக திருவிழாக்களான தேர்தல்களில் வெற்றி பெற பண பலம் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய அரசியல் கட்சிகளிலேயே சுமார் 10,000 கோடி ரூபாய் என்கிற பிரம்மாண்ட கார்ப்பஸ் நிதியைக் கொண்டு, நிதி ரீதியாக பலமான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த நிதியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் இந்த நிதியிருப்பு, இந்திய அரசியலில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள், முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பாஜக ஆட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. அந்த அளவுக்கு பலம் வாய்ந்த கட்சியாக இருந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இக்கட்சிக்கு கிடைக்கும் நன்கொடையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சொல்லப்போனால் தேர்தல் சமயத்தில் இது ஒரு பெரும் விவாதமாகவே மாறியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சேமிப்பா?!
கடந்த 2025ம் நிதியாண்டில் மட்டும் பாஜகவுக்கு 6,789 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பாஜகவின் வங்கிக் கணக்குகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியானது உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் பிக்சட் டெபாசிட்டாக மட்டும் 9,390 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 634 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கிடைத்திருக்கிறது.
செலவும் அதிகம் தான்!
சேமிப்பு மட்டுமல்ல, கடந்த 2025ம் நிதியாண்டில் டெல்லி, ஓடிசாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் பிரச்சாரங்களுக்காக 3,335.36 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளதாகவும், அண்மையில் பாஜக தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த செலவானது அதன் முந்தைய செலவான 1ம்754.06 கோடி ரூபாயை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு பாஜகாவின் நிகர மதிப்பும்(கேஸ் மற்றும் டெபாசிட்) 2025ம் நிதியாண்டில் 2,882.32 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி இவ்வளவு பெரிய நிதியிருப்பைக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கையின் படி, பாரதிய ஜனதா கட்சியின் மொத்த சொத்து மதிப்பு மற்றும் நிதி இருப்பு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
காரணங்கள் என்ன?
பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் சில முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வரை, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்ற கட்சியாக பாஜகவே இருந்தது. மொத்த பத்திரங்களில் 50%-க்கும் அதிகமானவை அக்கட்சிக்கே சென்றன. அதோடு இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நன்கொடையை பெரும்பகுதி ஆளுங்கட்சியான பாஜக-விற்கே வழங்கி வந்தன. மேலும் சமர்ப்பண் நிதி (Samarpan) போன்ற திட்டங்கள் மூலம் அடிமட்ட தொண்டர்கள் முதல் ஆதரவாளர்கள் வரை திரட்டப்படும் சிறு சேமிப்பு நிதியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுமார் 10,000 கோடி ரூபாய் என்பது வெறும் எண்கள் மட்டும் அல்ல, அது ஒரு கட்சியின் ஆதிக்கத்தையும், தேர்தலை எதிர்கொள்ளும் வலிமையையும் குறிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தல்களில் இந்த ‘பண பலம் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Share This Article English summary
How did the BJP build a Rs 10,000 crore corpus, and how does this wealth impact Indian elections?
With a Rs 10,000 crore corpus, BJP dominates Indian politics. This massive wealth, fueled by donations, provides an unmatched advantage in campaigning and infrastructure over rivals. Story first published: Thursday, January 22, 2026, 9:37 [IST] Other articles published on Jan 22, 2026
